தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 mei 2014

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ராஜபக்சவினர் உதவி?


இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் இரகசியமான நடவடிக்கைகளுக்கு இலங்கையின் இன்றைய அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது உறுதியாகியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயிற்சியளிக்கும் பயங்கரவாதிகளுக்கு ராஜபக்ஷவினர், இலங்கையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதாக தெரியவந்துள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாகிஸ்தான் பயங்கரவாத வலைமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்திருந்த இலங்கையின் கண்டியை சேர்ந்த ஜாகீர் உசைன் என்பவர் தமிழக கியூ பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கான ஆட்களை சேர்ப்பதற்காக கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரி ஒருவர், இந்த நபரை தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஜாகீர் உசைன் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றி வருவபவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் வழங்கிய வாக்குமூலம் காரணமாக இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளதுடன் அவர் என்ன வாக்குமூலத்தை வழங்கினார் என்பதை அந்த ஊடகம் வெளியிடவில்லை.
ஜாகீர் உசைன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்க இலங்கை உதவி வருவது தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் வெளியிட்டுள்ளதாக கூறும் இந்த சிங்கள் இணையத்தளம் அது பற்றி மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவை சேர்ந்த பயங்கரவாதிகள், இலங்கைக்கு செல்வதாக காட்டியே அங்கிருந்து இலங்கை வருகின்றனர்.
இலங்கைக்கு வரும் அவர்கள், இங்கிருந்து பாகிஸ்தானுக்கு பயிற்சிகளுக்காக செல்கின்றனர்.
எனினும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இவர்கள் இலங்கையில் இருந்து பாகிஸ்தான் பயணமானதற்கான குறிப்புகள் விமான நிலையத்தில் அவர்களின் கடவுச்சீட்டுகளில் பதியப்படுவதில்லை.
பாகிஸ்தான் முகாம்களில் பயிற்சிகளை முடித்து விட்டு இலங்கை திரும்பும் அவர்கள், இலங்கையில் இருந்து திரும்பிச் செல்வது போல் இந்தியா செல்கின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து இலங்கை திரும்பியதற்கான முத்திரைகளும் அவர்களின் கடவுச்சீட்டுக்களில் பதியப்படுவதில்லை.
பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ராஜபக்ஷ அரசாங்கத்தினரை சந்திக்க அடிக்கடி கொழும்பு வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
கடந்த 20 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நொயேல் இஸ்ராயேல் என்ற பாகிஸ்தான் இராணுவ அதிகாரி தலைமையில் 21 இராணுவப் பிரதிநிதிகள் இலங்கை வந்து அரசாங்கத்தை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் அந்த சிங்கள இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten