[ வியாழக்கிழமை, 01 மே 2014, 08:13.37 AM GMT ]
வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது.
காவி அணிந்த வன்முறைக் குழுக்களை நாடு முழுவதும் பயன்படுத்தி இனவாதத்தை தூண்டிவிட்டு தனது வாக்கு வங்கியை தற்காத்து கொள்ளும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக நவசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து நேற்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவதற்கான ஏதுக்கள், கருத்துக்கள் கிழக்கு முதலமைச்சரிடம் இல்லை.
அவர் வடக்கு தலைவர்களைப் புலிகள் என்றே கருதுகிறார்.
இவ்வாறானவர்களுடன் இணைந்து செயற்படுவதால் தமக்கு நெருக்கடி ஏற்படும் என்ற அச்சத்துடனேயே அவர் பதிலளித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எனவே இரு மாகாணங்களும் இணைந்து செயற்படுவதே சிறந்தது என நான் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.
ஆனால் இந்த கருத்தை அவர் ஏற்றுக்கொண்டவராகத் தெரியவில்லை. சங்கடத்துடனேயே பதிலளித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்த போதும், அவர் மத்திய அரசிடம் பேசவேண்டும் என்று சர்வசாதாரணமாகப் பதிலளித்தார் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காவி உடையணிந்த வன்முறையாளர்களை ஏவி அரசு இனவாதத்தை தூண்டுகிறது!- விக்ரமபாகு குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 01 மே 2014, 09:29.23 AM GMT ]
நவசமசமாஜ கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிற்குள் மத மற்றும் இனவாத சக்திகள் செயற்பட்டு வருகின்றன. காவி உடையணிந்த வன்முறைக் குழுக்களை பயன்படுத்தி அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருகிறது.
அண்மையில் எதிர்க்கட்சி மீது தாக்குதல் நடத்தி அரசாங்கம் தனது வன்முறைச் செயலைக் காட்டியது.
அதிகாரத்தைப் பரவலாக்கி, நாட்டை ஐக்கியப்படுத்துவதை கீழ் அடிப்பு செய்து விட்டு, சமூகத்தை மாற்றியமைத்து வினோதத்தை நோக்கி செல்லும் பயணத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
கசினோ போன்ற சமூக விரோத செயல்களுக்கும் ஊழல் செயல்களுக்கு இடமளிக்கும் வகையில் சுற்றுச் சூழலை விற்பனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் மன்னார் கட்டியெழுப்பிய சகலமும் அழிந்து போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் சமூகம் ஏற்றுக்கொண்ட நல்லொழுக்கம் அழிந்து போகும்.
தேர்தல் ஒன்று நடத்தப்பட்ட ஏற்றுக்கொள்ளக் கூடிய அடிப்படையில் இருந்து செயற்பட்டால் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும்.
அரசாங்கம் இனவாதத்தை தூண்டி தனது வாக்கு வங்கியை தற்காத்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் விக்ரமபாகு கருணாரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten