தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 10 mei 2014

முஸ்லிம் சமூகத்தின் மீது வன்முறையின் தொடர்ச்சி கடை எரிப்பு: அமைச்சர் றிஷாத்

அடக்கு முறையுடன் நடந்து முடிந்த உலக இளைஞர் மாநாடு..

ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் முறையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அத்துடன் சிறந்த உணவு விநியோகம் இன்மை, தங்குமிட வசதிகள் முறையாக ஏற்படுத்தாமை போன்ற குற்றச்சாட்டுகளையும் வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.Youth-01Youth-02Youth-07Youth-06Youth-05Youth-04Youth-03Youth-14Youth-15Youth-16Youth-17Youth-18
http://www.jvpnews.com/srilanka/68782.html

முதலமைச்சர் “CV” பாதுகாப்பு அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை!

யாழ்.கோவில் வீதியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்திய வெளிவிவகார உயரதிகாரி சுஜித்ரா துரை சுவாமிநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். சந்திப்பு முடிந்து வெளியே வந்த குழுவினரை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் வைத்து, இனம்தெரியாத நபர் ஒருவர் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டமை குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.கோவில் வீதியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்திய வெளிவிவகார உயரதிகாரி சுஜித்ரா துரை சுவாமிநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். சந்திப்பு முடிந்து வெளியே வந்த குழுவினரை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.
அப்போது அங்கு சிவில் உடையில் இருந்த நபர் ஒருவர் பொலிஸார் முன்னிலையில் ஊடகவியலாளர்களை மிகவும் அநாகரிகமான முறையில் நடத்தியதுடன், அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவரின் கமெரா சேதமுற்றது.
ஊடகவியலாளர்களை பலவந்தமாக வெளியேற்ற முயற்சித்து அநாகரிகமாக நடந்து கொண்டவர், முதலமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்றும் கொழும்பிலிருந்து தற்போது தான் வந்துள்ளார் என்றும் முதலமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் மன்மதராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் சார்பாக நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/68797.html

முஸ்லிம் சமூகத்தின் மீது வன்முறையின் தொடர்ச்சி கடை எரிப்பு: அமைச்சர் றிஷாத்

நேற்று அதிகாலை அளுத்கமவில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக கண்டனம் வெளியிட்ட அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்ததாவது- குறித்த வர்த்தகர் அளுத்கமவில் சிறப்பாக தொழில் புரிந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் நிலையில் இவரது உயர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத வர்த்தகர்களே இனவாத கும்பலை துாண்டிவிட்டு இந்த செயலை செய்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
கடந்த இரு நாள்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் சில பௌத்த பிக்குகள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் வர்த்தக நிலையம் எரிந்துள்ளது என்றால் இது திட்டமிடப்பட்ட சதியாக இருப்பதற்கு பலமான சாத்தியக்கூறு இருக்கின்றது. இலங்கையின் காவல் துறையினர் நாட்டில் நடைபெறுகின்ற பல்வேறு சிக்கலான குற்றச் செயல்களைக் கூட கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தமது திறமையை வெளிப்படுத்திய பல சந்தரப்பங்கள் உள்ளன.
ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அடாவடித்தனங்கள் அல்லது வன் செயல்கள் தொடர்பான குற்றவாளிகள் முழு நாட்டிற்கும் மட்டுமல்ல முழு உலகத்திற்குமே தெரிந்தாலும் இலங்கையின் காவல் துறையினருக்கு மாத்திரம் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. எனது அமைச்சுக்குள் பொலிஸாரின் கண்களுக்கு முன்னாலே புகுந்து காட்டு தர்பார் நடத்திய, நாட்டின் தொலைக்காட்சி நிலையங்களுக்கூடாக, முழு நாட்டிற்குமே அடையாளப்படுத்தப்பட்டவர்களை, இன்னும் நமது காவல் துறையினரால் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும். மட்டுமல்லாமல் எனது அமைச்சுக்குள் வைத்து பொலிஸ் உயர் அதிகாரிகளை திட்டியவர்களையே அவர்களால் அடையாளம் காணமுடியாமல் இருக்கின்றது.
தெமடகொடயில் வைத்து மாட்டிறைச்சி ஏற்றி வந்த லொறியை தீயிட்டுக் கொழுத்தியவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக சுமார் 250 இற்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் இன்று வரை அடையாளம் காணப்பட வில்லை.
அதேபோன்று அளுத்கமவில் இடம்பெற்ற தீவைப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள், பொலிஸாரால் இனங்காணப்படாத மற்றுமொரு சம்பவமாக இந்த வரிசையில் இடம்பிடிக்க அனுமதிக்க முடியாது. பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு அரசு உரிய நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தம்புள்ள பள்ளிவாசல் மீது கைவைக்கப்படமாட்டாது என்று அமைச்சு கலந்தாலோசனைக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதியால் எமக்குத் தரப்பட்ட வாக்குறுதிக்கு மத்தியில் குறித்த ஒரு மதகுருவின் அழுத்தம் காரணமாக அந்த பள்ளிவாசலின் இருப்பு மீண்டும் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கின்றது.
எனவே, இவ்வாறான நிலைமைகள் தொடர அனுமதிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும், நாளை தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசுக்குள்ளிருந்து கொண்டு நாம் போராடுகின்றோம். ஆனால் அரசு வாய் வீச்சில் பிரச்சினை இல்லை என்று சொல்லிக்கொண்டு நாளாந்தம் இனவாத சக்திகளிடமிருந்து முஸ்லிம்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை தொடர்ந்தும் கண்டும் காணாததுபோல் இருக்குமாயின், முஸ்லிம்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை ஜனநாயக சட்ட வரம்பிற்கு உட்பட்டு அரசுக்கு வெளியே நாங்கள் தேடவேண்டி ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.Aluthgama-fire
http://www.jvpnews.com/srilanka/68793.html

Geen opmerkingen:

Een reactie posten