காணாமல் போன பெண் மயானத்தில் இருந்து உயிருடன் மீட்பு (புகைப்படம் இணைப்பு)
08 May, 2014 by admin
வடமாரட்சி பகுதியில் கடந்த 3 ஆம் திகதி காணாமல்போனதாக கூறப்படும் பருத்தித்துறை தும்பளைப் பகுதியினைச் சேர்ந்த பெண் நேற்றைய தினம்(07) மீட்க்கப்பட்டுள்ளார். பேரின்பநாதன் தேவகி அம்மன் என்ற பெண் மேற்படி புதன்கிழமை (7) கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு மயக்கமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
யாழ்.புலோலி புளியங்கியான் இந்து மயானத்திற்கு அருகிலிருந்தே இவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்து மயானத்திற்கு அருகில் பெண்ணொருவரின் சடலமொன்று இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த பெண்னை உயிருடன் உள்ளதை கண்டுபிடித்துள்ளார்கள். இக் கடத்தல் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6794
இலங்கை பொலிசை காதலிக்கிறேன்: யாழ்ப்பாண யுதவி நேரடிப் பேட்டி !
08 May, 2014 by admin
தான் காதலிக்கும் பொலிசுடன் நேரடியாகப் பேட்டி கொடுக்கின்றார் ஒரு யாழ்ப்பாண யுவதி. யாழ்ப்பாணம் எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கு இது சான்று. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும் இக் காதல்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் காதலுக்கு கண் இல்லை என்பதுடன் தமிழ்த்தேசியமும் இல்லை என்பது இதிலிருந்து விளங்கவேண்டும் போல இருக்கு ! டக்ளசால் நடத்தப்படும் "டான்" ரீவிக்குப் போட்டியாக யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்க இருக்கும் ஒரு தொலைக்காட்சி சேவைக்காகவே இப் பேட்டியைக் கொடுத்துள்ளார் இந்த யுவதி. வீடியோ இணைப்பு.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6798
Geen opmerkingen:
Een reactie posten