மன்னார் காணியில் அடாவடி; பிரச்சினை நீதிமன்றுக்கு
மன்னார், கூராய் பிரதேசத்தில் தனியார் காணியைத் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அரசியல் செல்வாக்குடன் மணல் வியாபாரத்துக்கு பயன்படுத்திவருவதற்கு அப்பகுதிமக்கள் திரண்டு எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர். குருணாகலைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பலவந்தமாகக் காணியை அபகரித்து அதனூடாக மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து நேற்று மாலை தனது காணிக்கு வேலி அடைத்துள்ளார் உரிமையாளர். இதனைக் கேள்வியுற்ற தென்னிலங்கை வாசி, தனது ஆதரவாளர்களுடன் வந்து வேலியைப் பிரித்து காணிக்குள் தனது வாகனத்தைச் செலுத்தி வேலி அடைக்கவிடாமல் கலவரம் செய்துள்ளார். இதுகுறித்து காணி உரிமையாளர் இலுப்பக்கடவை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.அங்குவந்த பொலிஸார், இரண்டு பேரையும் காணிக்குள் செல்லக்கூடாது என்று பணித்ததுடன், எதிர்வரும் திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதனூடாகத் தீர்வுகாணுமாறும் பணித்தனர்.



http://www.jvpnews.com/srilanka/68809.html
புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மட்டக்களப்பில்
இந்தக் குழுவில், சவூதி அரேபியாவுக்கான தூதுவர் முகமட் ஹுசைன் முகமட், ஆப்கானிஸ்தானுக்கான தூதுவர் மரிக்கார் பாவா, பிலிப்பைன்ஸுக்கான தூதுவர் பேராசிரியர் எஸ்.வி.டி.காமினி சேனாநாயக்க, சிசெல் நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் டி.ராஜித பியதிஸ்ஸ, சிட்னி, கெய்ரோ, டுபாய், அம்மான் ஆகிய நாடுகளுக்கான இராஜதந்திரிகளான செல்வி ஜாசர அபேநாயக்க, பி.கே.எம்.ஆர்.எஸ்.விஜேயரத்ன, டிலுக்சன் ஜெயசிங்க, பிரதீப் பி.மத்துமபண்டார ஆகியோர் அடங்குகின்றனர். அத்துடன், இராஜதந்திரிகள் கற்கைகள் கல்லூரி பணிப்பாளர எம்.ஆர்.கீகெல், திட்ட அதிகாரி செல்வி டேசானி மேகலா, உதவித்திட்டப் பணிப்பாளர் துமிந்த சுஜீவ ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள், மீள் குடியேற்ற செயற்பாடுகள், புனரமைப்பு, புனர்நிர்மாண வேலைத்திட்டங்கள், போன்றவைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் கலந்துரையாடினர். அத்துடன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி, பொருளாதார வேலைத்திட்டங்கள் குறித்து அரசாங்க அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது. அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய வீடமைப்பு வேலைத்திட்டம், மற்றும் கரடியனாறு விவசாயப் பண்ணை உள்ளிட்ட இடங்களையும் இவர்கள் பார்வையிட்டனர். 




http://www.jvpnews.com/srilanka/68816.html
காதலில் குழப்பம்! மண மேடையில் மணமகள் சுட்சுக் கொலை…
இதற்காக அங்குள்ள மைதானத்தில் பிரமாண்டமான பந்தலும், மணமேடையும் அமைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஏராளமான உறவினர்கள் கூடியிருந்தனர். அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளத்தில் களை கட்டி இருந்தது. மணமகன் டாக்டர் ரோகித், மணமகள் டாக்டர் ஜெய்ஸ்ரீ ஆகியோர் மணமேடையில் வந்து அமர்ந்து இருந்தனர். உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து மணமக்களை ஆசீர்வதித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது திடீர் என்று ஒரு வாலிபர் உறவினர் போல் வந்து மேடை ஏறினார். கண் இமைக்கும் நேரத்தில் அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மணமகளை நோக்கி சுட்டார். அதில் அவர் உடலில் குண்டுகள் பாய்ந்து துளைத்தது. அவர் ரத்த வெள்ளத்தில் மேடையில் சரிந்து விழுந்தார்.
இதைப்பார்த்த திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் என்னமோ ஏதோ வென்று பதறியடித்து ஓடினார்கள். இதற்கிடையே உறவினர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்ட வாலிபரை பிடித்துக் கொண்டனர். சிலர் மணமேடையில் விழுந்து கிடந்த மணப்பெண்ணை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
தகவல் கிடைத்ததும் பொலிஸார், விரைந்து சென்று வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவரது பெயர் அனுராக்சிங். இவர் டொக்டர் ஜெய்ஸ்ரீயை காதலித்து வந்ததாகவும் அவர் தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்ததுள்ளது. தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.



http://www.jvpnews.com/srilanka/68795.html
Geen opmerkingen:
Een reactie posten