தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 11 mei 2014

அவசர அறிவிப்பு! தகவல் வழங்கினால் 10 லட்சம் (படம் இணைப்பு)

அமெரிக்க நிதி பெற்ற நிறுவனங்களிடம் புலனாய்வு விசாரணை!
அமெரிக்காவிடமிருந்து நிதி உதவி பெற்றுக் கொண்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இயங்கி வரும் பதினொரு அரச சார்பற்ற நிறுவனங்கள் அமெரிக்காவிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளன.

இவ்வாறு உதவி பெற்றுள்ள சில நிறுவனங்கள், அமெரிக்காவுடன் புலனாய்வு உறவுகளை பேணி வருகின்றன. இந்த நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வுப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க நிதி உதவி பெற்றுக்கொண்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தன. இதையடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
10 May 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1399738451&archive=&start_from=&ucat=1&
அவசர அறிவிப்பு! தகவல் வழங்கினால் 10 லட்சம் (படம் இணைப்பு)
குருநாகல் பிரதேசத்தில் போக்குவரத்து பொலிஸாரை கொலை செய்தமை மற்றும் அதே தினத்தன்று வேவெல்தெனிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரது புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த நபர்கள் குறித்த தகவல்களை அறிந்தவர்கள் 0094 772659336 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (11) இடம்பெற்ற ஊகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊகப் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சரியான தகவலை வழங்குபவருக்கு 10 லட்சம் ரூபா பரிசு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 8ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் முகத்தை முழுமையாக மூடிய தலைக் கவசத்தை அணிந்த கொள்ளைச் சம்பவங்கள் 97 இடம்பெற்றுள்ளன.

இதன்படி கல்கிஸ்ஸை பொலிஸ் பிரதேசத்தில் 26, நுகேகொடை பிரதேசத்தில் 11, காலி பிரதேசத்தில் 08, இரத்தினபுரி பிரதேசத்தில் 05, பாணந்திரை பிரதேசத்தில் 07 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
11 May 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1399801001&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten