[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2014, 12:25.18 AM GMT ]
தான் கட்சியின் சகலவிதமான அரசியல் செயற்பாடுகளிலிருந்தும் விடுபட்டு சுதந்திரமாக குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழவுள்ளதாக முகுந்தன் தெரிவித்தார்.
அந்தளவிற்கு தழிழ் அரசியல் கீழ்த்தரமடைந்துள்ளதாகவும், எந்தவொரு தமிழ் அரசியல்வாதியுமே தம்மை நம்பியிருக்கும் தமிழ் மக்களுக்காக உண்மையாக நடப்பதில்லை எனவும், மக்கள் நலனை விடவும் தமிழ் அரசியல்வாதிகளிடம் தாம் சார்ந்த சுயநலமே மேலோங்கிக் காணப்படுவதாகவும் முகுந்தன் தெரிவித்தார்.
தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்தவர் இல்லை என ஆனந்தசங்கரி கூறியதை தான் நிராகரிப்பதாகவும் கடந்த 25 வருட காலமாக இக்கட்சிக்காக தான் பாடுபட்டுழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கான ஆதாரங்களைத் தான் வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyFSVLYit6.html
கோத்தாவைத் துரத்தும் விசாரணை! அமெரிக்கா வீட்டிலும் சோதனை
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2014, 01:22.05 AM GMT ]
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் கோத்தபாய ராஜபக்ச 1992ம் ஆண்டு தொடக்கம் அமெரிக்காவில் குடியுரிமையைக் கொண்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள இவர், 2004ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ச பிரதமராகும் வரை பெட்ரோல் பங்க் மற்றும் தனியார் வர்த்தக நிலையம் என்பவற்றில் கூலித் தொழிலாளியாக இருந்தவர்.
அக்காலத்தில் ஒரு அறை கொண்ட சாதாரண வீடொன்றில் குடியிருந்த அவர், அதற்கான தவணைக்கட்டணம் செலுத்துவதற்கும் சிரமப்பட்ட நிலையில் இருந்தார்.
இந்நிலையில் 2004ம் ஆண்டின் பின் அவரது வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனையாக இலங்கைப் பிரதமரின் (மஹிந்த ராஜபக்ச) வின் பாதுகாப்பு ஆலோசகர் பதவி கிட்டியது.
2005ல் நாட்டின் பாதுகாப்ப செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் அவர் வாழ்வில் வசந்தம் வீசுவதாகவே தகவல்கள் தெரிவிவக்கின்றன.
இதற்கிடையே விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக அச்சுறுத்தல் காரணமாக கோத்தபாய ராஜபக்ச தற்போது அமெரிக்கா செல்வதையே தவிர்த்து வருகின்றார்.
எனினும் அங்கு ஆடம்பரமான பங்களா ஒன்றை அண்மைக்காலத்தில் அவர் வாங்கியிருந்தார். இதில் பணிப்பெண் உள்ளிட்ட அவரது உறவினர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆடம்பர பங்களாவுக்கு வந்திருந்த சில அதிகாரிகள் கோத்தபாய தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரணையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் தாங்கள் யார்? எதற்காக இந்த விசாரணை என்பன போன்ற விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை என்று தெரியவருகின்றது.
இந்த விடயம் கேள்விப்பட்டதில் இருந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடும் டென்ஷனில் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyFSVLYiuz.html
Geen opmerkingen:
Een reactie posten