தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 mei 2014

கனடாவை மிரட்டும் இலங்கை…

பொதுமக்களே கவனத்தைச் சிதறவிடாதீர்கள்: கனடா- மொன்றியலில் 122 குற்றச்சாட்டுக்கள் மூவரில்…. 

கனடாவில் மொன்றியல் பகுதியில் ரொறன்ரோவில் நடைபெற்றதொரு மோசடி சம்பந்தமாக மொன்றியலில் 2வர்மேல் 122 குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தத் தகவலை ரொறன்ரோப பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.
பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்களின்படி குறிப்பிட்ட 3 நபர்களும் மொன்றியலில் இருந்து ரொறன்ரோவிற்குப் பல தடவைகள் 2013ம் ஆண்டில் இருந்து பயணித்திருக்கின்றார்கள் எனவும் அத்தோடு ரொறன்ரோவில் டவுன்ரவுணில் உணவு விடுதிகள், பார்கள் என்பவற்றில் திசைதிருப்பல் நடவடிக்கைகள் இடம்பெற்றபோது அங்கு களவுகளும் நடைபெற்றிருக்கின்றன எனத் தெரியவருகிறது. திசை திருப்பல் சம்பவங்களின்போது அங்கிருப்பவர்களின் பணப் பைகள் அவர்களின் முக்கிய ஆவணங்கள். வங்கி அட்டைகள், கடன அட்டைகள் போன்றன களவாடப்பட்டிருந்தன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருடப்பட்ட அட்டைகளைப் பாவித்து ரொறன்ரோவில் பொருட்களும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. இவ்வாறான நிகழ்வுகள் பீல் பிராந்தியம், ஒட்டாவா, குவிபெக் மற்றும் வன்கூவர் ஆகிய இடங்களில் நடைபெற்றிருக்கின்றன எனத் தெரியவருகிறது.
குறிப்பிட்ட விடையம் சம்பந்தமாக David Rossy, 27 Andre Beaulieu, 32 வயது. taJ. Ransford Steele taJ 48 வயது ஆகிய மூவர் மேலும் 122 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- See more at: http://www.canadamirror.com/canada/25744.html#sthash.sni23BGj.dpuf


கனடாவை மிரட்டும் இலங்கை…

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று தாம் வெளியிட்ட தடைப் பட்டியலைப் புறக்கணிக்கக் கூடாது என்று கனடாவிடம் சிறிலங்கா கோரியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை தடைசெய்து வெளியிட்ட அறிவிப்பை, தாம் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் அறிவித்திருந்தார்.
இதுகுறித்து, நேற்று கொழும்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,
“சிறிலங்காவினால் பட்டியலிடப்பட்டுள்ள 16 அமைப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கமும் ஒன்று.
விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னமும், தமது நாட்டில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக உள்ளது என்பதை கனடா நினைவில் கொள்ள வேண்டும்.
கனடா சரியாகச் செயற்படும் என்று நம்புகிறோம்.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாகவே, சிறிலங்கா அரசாங்கம் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதனைப் புறக்கணிப்பது ஐ.நா பிரகடனங்களை மீறுதாக அமையும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு
- See more at: http://www.canadamirror.com/canada/25727.html#sthash.oJqE11iM.dpuf


Geen opmerkingen:

Een reactie posten