தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 mei 2014

அரசும் கூட்டமைப்பும் கட்டாயம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்!- அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்!!

இலங்கைக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கட்டாயம் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் கடந்த வாரம் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறான பேச்சுவார்த்தைகள் இன்றி இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கமும் கூட்டமைப்பும் நம்பிக்கை தரும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் இந்த பேச்சுவார்த்தைக்கான ஆரம்ப நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இப்படியான நடவடிக்கை எடுக்கப்படாது போனால் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கக் கூடும். இதனால் அரசியல் தீர்வொன்றை பெறுவதும் கடினமாகி போகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வந்த தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZkx4.html

Geen opmerkingen:

Een reactie posten