தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 mei 2014

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை அரசியல்வாதிகளே விரும்புகின்றனர்: பிள்ளையான்

சந்திரிகாவை சந்தித்த அமைச்சர்கள் பற்றிய புலனாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு
[ திங்கட்கிழமை, 26 மே 2014, 06:12.23 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது.
அரச புலனாய்வு சேவையால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில், ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
கடந்த காலங்களில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதியமைச்சரும், முன்னாள் ஜனாதிபதியை  பல தடவைகள் சந்தித்துள்ளதாகவும் இந்த அமைச்சர்களில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியை வெளிநாடு ஒன்றில் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியை வகித்து வரும் அமைச்சர் ஒருவர் தான் சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில் தனக்கு அரசாங்கம் உரிய கௌரவிப்பை வழங்குவதில்லை என்று அதிருப்தியில் இருந்து வருவதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZkx3.html
வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை அரசியல்வாதிகளே விரும்புகின்றனர்: பிள்ளையான்
[ திங்கட்கிழமை, 26 மே 2014, 03:21.28 AM GMT ]
நான் அமைதியாக இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மாகாண சபைக்குள் இருந்து கொண்டு நமது மக்களை காக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறேன் என்கிறார் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான்.
ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அந்த சேவைகளுக்காக தாம் ஊடகங்களை பயன்படுத்துவதில்லை என்றும் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபை தேர்தலில் முன்னைய தேர்தலை காட்டிலும் தமக்கு இறுதித் தேர்தலில் மக்கள் குறைந்தளவான வாக்குகளையே அளித்தனர்.
இது மக்கள் தம்மை காப்பாற்றியவர்களை மறந்துவிட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆளும் கட்சிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளே தமக்கு முதலமைச்சர் பதவி மீண்டும் கிடைக்காமைக்கான காரணமாகும்.
எனவேதான் தாம் அதிக விருப்பு வாக்குகளை பெற்றபோதும் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை என்றும் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.
இந்தநிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதை மக்கள் விரும்பவில்லை. அரசியல்வாதிகள் சிலரே விரும்புகின்றனர் என்றும் பிள்ளையான் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZkx0.html

Geen opmerkingen:

Een reactie posten