[ புதன்கிழமை, 21 மே 2014, 03:58.18 PM GMT ]
மீண்டும் பல மில்லியன் ரூபாய்கள் இலங்கையில் குதிரைக் கொம்பாகிவிட்ட நல்லிணக்கம் என்ற பெயருக்கு தாரைவார்க்கப்பட் இருக்கின்றது.
கடந்த 2013ம் ஆண்டு பொதுநலவாய அமைப்பினால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து 4 நாள் செயலமர்வு ஒன்றை நடாத்தியது.
இதில் தேசிய மட்டத்தில் சித்திரவதைகள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தத் தீர்மானம் கடைசியில் ஒரு தீர்மானம் மட்டுமாகவேயாகி ஒரு அடி அதனால் நகர முடியாமல் எல்லாம் வல்ல மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் மிரட்டலால் காணாமல் போயிற்று.
இதில் பெருத்த மில்லியன் கணக்கில் பணத்தை வீணடித்தது பற்றியும் பொது நலவாய அங்கத்துவ நாடொன்றின் கேவலமான மனித உரிமைகள் மீதான அக்கறை பற்றியும் அலட்டிக் கொண்டதாவோ வருத்தப்பட்டதாவே தெரியவில்லை.
இப்போது மீண்டும் சினமன் நட்சத்திர விடுதியில் மனித உரிமைகளின் பேரால் பெருந்தொகையான பணத்தை வீணடிக்க பொதுநலவாய அமைப்பும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தயாராகிவிட்டன.
ஏற்கனவே இலங்கையை தடவிக்கொடுக்கும் தலையாய பணியை செவ்வனே செய்யும் அமைப்புக்கு மகிந்த ராஜபக்சவே தலைவரான பின் பொதுநலவாய அமைப்பு எவற்றைச் செய்யப் போகின்றது என்பதை இங்கு சொல்லவே தேவையில்லை.
இப்படி இருக்க மீண்டும் பொதுநலவாய அமைப்பும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும் செயலமர்வுக்கு சினமன் கோட்டலில் தயாராகி வருவது எதற்கு என சிந்திக்கின்றபோது ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம் ஆளுக்கு பாதி பணத்தை சுருட்டுவதை தவிர வேறு எதுவாயும் இருக்க வாய்ப்பில்லை.
எனவே இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும் பொதுநலவாய அமைப்பும் சுருட்டிக்கொண்ட பணத்தொகை எவ்வளவு என்பதை ஓரளவு கண்டுபிடிப்பது மிகநன்று. யப்பானிடமும் பொதுநலவாய அமைப்பிடமும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பெருமளவு நிதியை சுருட்டுகின்றது.
கவனியுங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான திட்டம் இதில் சுருட்டிய நிதியின் அளவு 206 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்கிய பெருமை யு.என்.சி.ஆரை சாரும்.
இந்த கொள்ளைத் திட்டத்திற்கு முகாமையாளர் சேனக திசாநாயக்கா. இந்த திருடனுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. திட்டம் போட்டு திருடிக்கொண்டே இருக்கிறது.
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது? திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்ற பட்டுக்கோட்டையில் வரிகள்தான் ஞாபகம் வருகின்றது.
இந்த சேனக திசாநாயக்கா கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் கூட சித்திபெறவில்லையாம் பாருங்களேன். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மகத்தான பணியை.
அடுத்த திட்டம் சித்திரவதை தொடர்பிலான திட்டம். 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திட்ட முகாமையாளர் தற்போது இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மேலதிக செயலாளராக இருக்கும் நிமல் ஜி புஞ்சிகேவா.
இந்த திட்டத்திற்கு நிதி கொடுத்து நட்டப்பட்டவர்கள் சுவிட்சர்லாந்து தூதுரகத்தினர். என்ன செய்ய புஞ்சிகேவா கணக்கு வழக்கு எதுவும் காட்டவில்லை.
எப்படி காட்டுவார் அவர் மகிந்தராஜபக்சவின் நெருங்கிய சகாவாம். நிதியை சுருட்டுவதற்கென்றே புதிது புதிதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு திட்டங்கள் இன்னும் உருவாக்கும்.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZmt3.html
இலங்கை சில நாடுகளால் தண்டிக்கப்படுகிறது: ஜனாதிபதி மஹிந்த
[ புதன்கிழமை, 21 மே 2014, 04:54.06 PM GMT ]
பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக சில நாடுகளால் இலங்கை தண்டிக்கப்படுகிறது.
பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட நாளில் இருந்து அதற்கு தடை ஏற்படுத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி இன்று குறிப்பிட்டதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்தே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZmt4.html
Geen opmerkingen:
Een reactie posten