இந்திய மீனவர்கள் 51 பேரும் விடுதலை! (படம் இணைப்பு) |
இலங்கைச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 51 பேரையும் இலங்கை அரசு விடுவித்துள்ளதாக அறியமுடிகிறது. சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இன்று உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் மூன்று கட்டங்களாகப் பிடிக்கப்பட்டு, இலங்கைச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 51 இந்திய மீனவர்களையும் விடுவித்துள்ளதாக இலங்கைத்தரப்பு அறிவித்துள்ளது. இதேவேளை இந்தியாவிலும் இலங்கை மீனவர்கள் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
25 May 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1401028451&archive=&start_from=&ucat=1&
மஹிந்தவின் பொம்மை டில்லியில் எரிப்பு! ( படங்கள் இணைப்பு) |
இந்தியத் தலைநகர் டில்லி, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்பொம்மையை எரித்து ம.தி.மு.கவினர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்கிறார். இந்த நிகழ்வுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ள நிலையில் ம.தி.மு.க.வினர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி டில்லியில் அறப்போராட்டம் நடத்தினர். இதன்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்பொம்மை, உருவப்படங்கள் என்பவற்றை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
|
26 May 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1401095461&archive=&start_from=&ucat=1& |
|
Geen opmerkingen:
Een reactie posten