தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

மோடி பதவியேற்பில் பங்கேற்க எதிர்ப்பு : ரஜினிகாந்த் வீடு முன் ஆர்ப்பாட்டம்!

இந்தியாவின் 14ஆவது பிரதமராக நாளை மோடி பதவி ஏற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வருகிறார். நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
ஈவு இரக்கமின்றி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்‌ஷ இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ரயில் மறியல் போராட்டங்களும் நடந்து வருகிறது.
ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழ.நெடுமாறன், இயக்குநர் பாரதிராஜா உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ராஜபக்‌ஷவை அழைத்ததால் தமிழகத்தில் இருந்து யாரும் மோடி பதவி ஏற்பு விழாவிற்கு செல்லக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன் மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, நரேந்திரமோடி ரஜினி வீட்டிற்கே சென்று அவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இருவரும் நீண்ட கால நண்பர்கள். மோடி பதவி ஏற்பு விழாவிற்கும் மோடியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ரஜினிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten