இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து அமெரிக்கா தீவிர கவனம்!
இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் புதிய அரசியல் பிரவாகம் ஒன்று தொடர்பில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகின்றது.
அரசியல் நிலைமைகள் குறித்து முக்கிய அரசியல்வாதிகள் பலரிடம் அமெரிக்கப் பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார், அதற்கு மிகவும் பொருத்தமானவர் யார் என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆளும் கட்சிக்குள் நிலவி வரும் முரண்பாடு நிலைமைகள் குறித்து, அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அந்நாட்டு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளும் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
யாரை பொது வேட்பாளராக நியமிக்க முடியும் என்பது குறித்து எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஊடக பிரதானிகளிடம் அமெரிக்கா கருத்து கேட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையில தெரிவிக்கப்பட்டுள்ளது.
- See more at: http://www.canadamirror.com/canada/26534.html#sthash.e42Fp7Hb.dpufகேபி சகாக்களுடன் மக்கள் மோத முற்பட்ட வேளை பதட்டம்
வலி.வடக்கின் தையிட்டிப்பகுதியினிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பமொன்று குறித்த கோண்டாவில் பகுதியினில் வசித்து வருகின்றது.அக்குடும்பத்தின் திருமணநிகழ்வினில் கலந்து கொள்ளவே அரச விருந்தாளி கே.பியும் வருகை தந்துள்ளார்.அவரிற்கு பாதுகாப்பாக அமைச்சு பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் வந்திருந்த போதும் மற்றொரு வாகனத்தினில் கும்பலொன்றும் வந்துள்ளது.
குறித்த கும்பலை சேர்ந்தவர்களே சந்தேகத்திற்கிடமான முறையினில் அருகாகவுள்ள ஒழுங்கை ஒன்றினில் தரித்து நின்றுள்ளனர்.குறித்த கும்பலை சேர்நதவர்களை கொள்ளை கும்பலென சந்தேகம் கொண்ட ஊர் மக்கள் சுற்றிவளைத்ததுடன் தாக்கவும் முற்பட்டுள்ளனர்.அத்துடன் இலங்கைப்பொலிஸாரிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.எனினும் குறித்த கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கிகளை காட்டி மக்களை மிரட்ட முற்பட பதற்றம் அதிகரித்துள்ளது
சந்தேகத்திற்கிடமாக வீடொன்றின் முன்பதாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினில் அச்சங்கொண்டு ஊர்மக்கள் திரண்டு சுற்றிவளைத்த சம்பவமொன்று இன்றிரவு கோண்டாவில் பகுதியினில் நடந்துள்ளது.எனினும் அந்த வாகனம் அரச விருந்தாளியாகவுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனிற்கு பாதுகாப்பிற்காக வந்தவர்களுடையதென பின்னரே தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தினில் பதற்றம் தொடர்ந்த நிலையினில் அவ்விடத்திற்கு பாய்ந்து விழுந்து வந்த கேபியும் அவரது மெய்பாதுகாப்பாளர்களும் நிலமையினை தெளிவுபடுத்திய மன்னிப்பு கோரிய பின்னரே மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.அத்துடன் குறித்த கும்பலும் அகன்று சென்றுள்ளது.
may 24 2014
- See more at: http://www.canadamirror.com/canada/26524.html#sthash.X44Wfr1C.dpuf
Geen opmerkingen:
Een reactie posten