தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 mei 2014

போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கையிடம் தொடர்ந்தும் வலியுறுத்தப்படுகிறது!- அவுஸ்திரேலியா !

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும் பயனுள்ளதும் வெளிப்படையானதுமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குடனான சமாதான திட்டத்தை முன்னெடுக்க இலங்கையை ஊக்குவிக்கும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளரரும் செனட்டருமான பிரட் மேசன், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை கூறியுள்ளார்.
மோதல்களின் போது இருத்தப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவுஸ்திரேலியா இலங்கையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், இலங்கையுடனான அவுஸ்திரேலியாவின் கொள்கை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் மேசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சில வெளிநாட்டு புலம்பெயர் அமைப்புகளை தடைசெய்தாலும் அந்த அமைப்புகள் அவுஸ்திரேலியா சட்டத்திற்கு அமைய செயற்படும் சுதந்திரத்தை அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தாது.
அவுஸ்திரேலியா உரிமைகளுக்கான சுதந்திரத்தை வலுவாக ஆதரித்து வருகிறது.
அத்துடன் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இலக்கு வைக்கப்பட்டதை நல்லிணக்கத்திற்கான உகந்த செயலாக அவுஸ்திரேலியா கருதவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZko7.html

Geen opmerkingen:

Een reactie posten