தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 mei 2014

இராணுவத்துடன் பழகி தகவல்களை திரட்டிய புலி உளவாளி கைது

தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்களின் சொத்துகள் அரசுடமையாக்கப்படும்!
[ திங்கட்கிழமை, 26 மே 2014, 12:35.03 AM GMT ]
கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம், தடைவிதிக்கப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களின் எல்லா நிதிகள், ஏனைய நிதிச் சொத்துகள், பொருளாதார வளங்களையும், முடக்கும் வர்த்தமானி அறிவித்தலை  இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று ஐ.நா பாதுகாப்புச்சபையின் 1373 தீர்மானத்துக்கு அமைய வர்த்தமானியில் பெயரிடப்பட்ட இந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் சொத்துக்களையே முடக்குவதாக  அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த தடை அறிவிப்பை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச வர்த்தமானி மூலம்  கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று பிரகடனப்படுத்தப்பட்ட, அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் எல்லாச் சொத்துகள் மற்றும் நிதிகள், பொருளாதார வளங்களும், அவர்களினால் சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்களின் வசமுள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வர்த்தமானி அறிவிப்பு இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்த சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZkw2.html

இராணுவத்துடன் பழகி தகவல்களை திரட்டிய புலி உளவாளி கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2014, 11:39.59 PM GMT ]
இராணுவப் படைச் சிப்பாய்களுடன் பழகி தகவல்களை திரட்டி வந்த தமிழீழ விடுதலைப் புலி உளவாளி ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஜெயா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்புக்கும் நோக்கில் உளவுத் தகவல்களை திரட்டியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
உளவுத் தகவல்களை திரட்டும் நோக்கில் இராணுவச் சிப்பாய்களுடன் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் உயர் பதவியொன்றை வகித்து வந்த குறித்த நபர், கொழும்பிற்கு அடிக்கடி சென்று படைச்சிப்பாய்களை சந்தித்துள்ளார்.
சந்தேக நபரின் செல்லிடப் பேசியிலிருந்து பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24ம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்து சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRZLZkwy.html

Geen opmerkingen:

Een reactie posten