தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 mei 2014

புலிகள் மீளவும் தாக்குதல் நடத்தக் கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை!

ஜனாதிபதியின் அழைப்பை விக்னேஸ்வரன் நிராகரித்தமை பாரிய தவறு: ஜீ.எல்.பீரிஸ்
[ திங்கட்கிழமை, 26 மே 2014, 02:42.12 AM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதியுடன் இந்தியா செல்லும் அழைப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் நிராகரித்தமையை அரசாங்கம் கண்டித்துள்ளது.
நல்ல எண்ணத்துடன் விடுக்கப்பட்ட இந்த அழைப்பை நிராகரித்தமை விக்னேஸ்வரன் செய்த பாரிய தவறு என்று வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஏதுநிலைகள் இந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமானால் ஏற்பட்டிருக்ககூடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் ஜனாதிபதி தலைமையிலான குழு இன்று இந்தியா செல்கிறது.
இதில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலாளர் சேனுக்கா செனவிரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், யாழ்ப்பாண மாநகர முதல்வர் யோகேஸ்வரி ஆகியோர் அடங்கியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZkw7.html
புலிகள் மீளவும் தாக்குதல் நடத்தக் கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 26 மே 2014, 02:07.42 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தாக்குதல் நடத்தக்கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட கோபி, தேவியன் உள்ளிட்டவர்களை கொலை செய்தமைக்கு பழி தீர்க்கப் போவதாக பிரான்ஸிலிருந்து அவர்களை வழிநடத்திய சந்தோசம் சூளுரைத்துள்ளார்.
எனவே வடக்கு மற்றும் வன்னிப் பகுதிகளில் கடமையில் ஈடுபட்டு வரும் படையினர் மற்றும் பொலிஸார் தனித் தனியாக கடமைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடமைக்குச் செல்லும் போது ஆயுதங்களை எடுத்துச் செல்லுமாறும் புலனாய்வுப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளதாக உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டு;ள்ளார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்ற போதிலும்,  முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வன்னிக் காட்டுப் பகுதிகளில் அடிக்கடி தேடுதல் வேட்டைகள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZkw4.html

Geen opmerkingen:

Een reactie posten