[ வெள்ளிக்கிழமை, 02 மே 2014, 09:35.21 AM GMT ]
சென்னையில் சில நாட்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் ஹூசேன் என்பவர் சிக்கினார். அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உளவாளி.
அவரை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், இந்தியாவில் நாசவேலைகளுக்காக உளவு பார்க்க அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் உளவு அமைப்பு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததையும் ஜாகீர் ஹூசேன் தெரிவித்திருந்தான்.
இந்நிலையில் சென்னையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிக்கும் தங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று கொழும்பில் உள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த எந்த ஒரு அதிகாரியும் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFTWLYmq6.html

பாரத படுகொலை வழக்கு! துமிந்த எம்.பி மீது மனிதப் படுகொலை குற்றச்சாட்டு! இன்று நீதவான் அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 02 மே 2014, 09:01.10 AM GMT ]
அவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு போதிய சாட்சிகள் இருப்பதாகவும் நீதவான் பிரியந்த லியனகே இன்று தெரிவித்தார்.
அதனடிப்படையில் குறித்த படுகொலை வழக்கை மேல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு மாற்றுவதாகவும் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
2011ம் அண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு நீதவான் நீதிமன்றத்தில் சுமார் மூன்று வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை, இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் நீதவான வழக்கை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துமிந்த சில்வாவுக்கு எதிராக கொலை வழக்கு தாக்கல் செய்யப்படும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாகுக்கு எதிராக கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.
பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர மற்றும் மேலும் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற முதல் அடிப்படை சாட்சிய விசாரணைகள் இன்று நிறைவடைந்தன.
இதனடிப்படையில் துமிந்த சில்வா மற்றும் 11 பேருக்கு எதிராக கொலை குற்ற வழக்கை தாக்கல் செய்ய போதுமான சாட்சியங்கள் இருப்பதாக மேலதிக நீதவான் பிரியந்த லியனகே தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக நீதவான் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTWLYmq5.html

Geen opmerkingen:
Een reactie posten