தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 mei 2014

இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லை! அச்சுறுத்தல் தொடர்கிறது: பிரித்தானியா

பாம்பு தீண்டியவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றவர் மீது பொலிஸார் சரமாரி தாக்குதல்!
[ வெள்ளிக்கிழமை, 02 மே 2014, 01:32.49 PM GMT ]
பாம்பு தீண்டியவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற வேளை இடைமறித்த பொலிஸார் இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். இதன்போது  காயமடைந்த இருவரும்   மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு மல்லாவி மருத்துவமனைக்கு அருகில் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
மல்லாவி மருத்துவமனையின் அம்புலன்ஸ் சாரதி ஒருவர் பணியாளர் விடுதியில் தங்கியிருந்த வேளை அவரைப் இரவு 9 மணியளவில் பாம்பு தீண்டியுள்ளது.
100 மீற்றர் தூரத்திலேயே மருத்துவமனை இருந்ததால் விடுதியில் நின்ற மோட்டார் சைக்கிளில் பாம்பு தீண்டியவரை ஏற்றிக்கொண்டு மற்றுமொருவர் சென்றுள்ளார்.
இதன்போது மருத்துவமனைக்கு அருகில் வீதிப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இவர்களை மறித்துள்ளனர்.
மறித்த இடத்திலிருந்து 20 மீற்றர் தொலைவில் மருத்துவமனை வாயில் இருந்ததால் அங்கேயே மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
அத்துடன் இருவரும் தலைக்கவசமும் அணிந்திருக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொலிஸார் இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பாம்பு தீண்டிய சம்பவம் குறித்தும் அருகிலுள்ள விடுதியில் இருந்தே வருகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்த போதும் பொலிஸார் எதனையும் பொருட்படுத்தாது தாக்கியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் காயமடைந்துள்ள இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyFTWLYmsz.html


இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லை! அச்சுறுத்தல் தொடர்கிறது: பிரித்தானியா
[ வெள்ளிக்கிழமை, 02 மே 2014, 12:31.59 PM GMT ]
உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை கீழ் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் ஊடகங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் தமது பணிகள் காரணமாக உலகம் முழுவதும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேபோல் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கடினமான பின்னணியில் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன.
2000 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன், அதற்கான நீதி வேண்டி அவர்களின் குடும்பங்கள் இன்னும் காத்துள்ளனர் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்தார்.
கடந்த கால குற்றச் செயல்கள் குறித்து விசாரணைகளை நடத்தி, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் உறுதியான கடப்பாட்டை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.
நாம் பரந்த உலக மாற்றத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். செழுமை மற்றும் மனித உரிமைகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான ஜனநாயக சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்திரம், கலாசார தொடர்பில் சமூகத்தின் ஊடான மாற்றங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த ஜனநாயக மதிப்புகள் தொடர்பில் எமது பங்காளர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என பிரித்தானியா நம்புகிறது.
உலக ஊடக சுதந்திர தினத்தில் கருத்துச் சுதந்திரத்தை பின்பற்றுவதில் நாம் தமது உறுதிப்பாட்டை புதுப்பிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTWLYmr5.html

Geen opmerkingen:

Een reactie posten