தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 mei 2014

அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடைகிறது!– இலங்கை அரசாங்கம் நம்பிக்கை

அரசாங்கத்திற்கு சிகப்பு எச்சரிக்கை!- விமல் வீரவன்ச அறிவிப்பு - ஆளும்கட்சியுடன் தொடர்ந்தும் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாத நிலை!– சம்பிக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2014, 12:13.57 AM GMT ]
அரசாங்கத்திற்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளக மைதானத்தில் நாளை பிற்பகல் 2.30 மணியளவில் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களின் நிலைப்பாடு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
கூட்டமைப்புடன் நிலவி வரும் கருத்து முரண்பாடுகளை விரைவில் களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வெறுமனே போலி ஒற்றுமை ஒன்றைக் காண்பித்து கூட்டணியில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் உத்தேசம் கிடையாது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது விரைவில் தீர்மானிக்கப்படும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியுடன் தொடர்ந்தும் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது – சம்பிக்க
ஆளும் கட்சியுடன் தொடர்ந்தும் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர், அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்படத் தயார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் முன்னோக்கி நகர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் சகல கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மஹிந்த சிந்தனைக் கொள்கைக்கு மாறாக, ஐக்கிய தேசியக் கட்சியின் மீண்டெழு இலங்கை என்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது.
இந்த நிலைமை குறித்து எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியில் பொதுமக்களுடன் கலந்துரையாடப்படவுள்ளது.
மக்களின் நிலைப்பாட்டுக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFTYLYlo1.html
அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடைகிறது!– இலங்கை அரசாங்கம் நம்பிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2014, 12:23.46 AM GMT ]
அமெரிக்க அரசாங்கம் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை மென்மைப் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிசா பிஸ்வால், இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த மக்களுடனும், அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த கூற்றை மேற்கோள்காட்டியே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை அமெரிக்கா தற்போது புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTYLYlo2.html

Geen opmerkingen:

Een reactie posten