இலங்கையின் முஸ்லிம் இளைஞர்களுக்கு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு என்பன போர் பயிற்சிகளை வழங்கி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இவர்கள் தற்போது கெரில்லா போர் முறை குறித்த பயிற்சிகளை பெற்று வருவதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
சர்வதேசம் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைவருக்கு அரசாங்கம் ஆயுத பயிற்சிகளை வழங்கி வரும் நிலையில், முஸ்லிம் இளைஞர்களுக்கு மத்திய கிழக்கில் போர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சிகளை பெற 30 பேர் கொண்ட இலங்கை முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட குழு லெபனானுக்கு சென்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பான இணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையைச் சேர்ந்த சில முஸ்லிம் வர்த்தகர்கள் லெபனான் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் மாமாவினால் லெபனான் தூதுவராக இருந்த போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்பின் ஊடாக பயிற்சிகளை பெற்றுக் கொடுத்திருந்ததுடன் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டனர்.
இந்த நிலையில், இலங்கையில் அண்மைய காலமாக பொதுபல சேனா, சிங்கள ராவய, இராவணா பலய போன்ற அடிப்படைவாத அமைப்புகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அனுசரணையுடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுத்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக மத்திய கிழக்கில் உள்ள அடிப்படைவாத அமைப்புகளின் பார்வை இலங்கை பக்கம் திரும்பியுள்ளது.
கடந்த காலங்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கம், இலங்கையின் வடபகுதியை சேர்ந்த அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கியதாக இஸ்ரேல் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் முன்னாள் அதிகாரி விக்டர் ஒஸ்ரோவிஸ்கி எழுதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் பல முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அல்-குவைதா, ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய அமைப்புகள் பிரதான அமைப்புகளாகும்.
இதனை தவிர மேலும் பல அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவற்றின் ஒரே அடிப்படையான கொள்கை வன்முறை மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது மற்றும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளுக்கு எதிராக போராடுவது என்பனவாகும்.
இஸ்ரேலின் பரவல்வாதத்திற்கு எதிராக போராடும் நோக்கத்திலேயே ஹிஸ்புல்லா அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
இந்த அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பு ஆசியாவில் உள்ள பல முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறது.
இவற்றில் இலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் இருப்பதுடன் இவர்களில் பலர் மத்ரஸா என அழைக்கப்படும் அறநெறி பாடசாலைகளிலும் மத்திய கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் இஸ்லாம் தொடர்பான கல்வி பயின்று வருகின்றனர்.
மகிந்த அரசாங்கத்தின் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்திற்கு எதிராக முஸ்லிம் அடிப்படைவாதம் ஏற்படப் போவது நிச்சயமானது. இது மிகவும் அபாயகரமானது.
சிரியாவுக்கு எதிராக பல ஜிகாத் அமைப்புகள் தற்போது தமது உறுப்பினர்களை அனுப்பி வைப்பது போல், ஆப்கானிஸ்தான் சோவியத் யூனியனுக்கு எதிராக ஜிகாத் உறுப்பினர்களை அனுப்பியது.
பிலிப்பைன்ஸில் உள்ள முஸ்லிம் அமைப்புக்கும் ஜிகாத் அமைப்புகள் தமது உறுப்பினர்களை அனுப்பியுள்ளன.
இலங்கையில் தற்போது நடந்து வரும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தால், அப்படியான நிலைமை இலங்கையிலும் ஏற்பட போவதை எவராலும் தடுக்க முடியாது.
இதனிடையே முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது பொதுபல சேனா அமைப்பினர் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க வேண்டுமாயின் பணம் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்து, அந்த அமைப்பு பெருமளவில் கப்பம் பெற்று வருவதாக தெரிவருகிறது.
ஞானசார தேரரின் நெருங்கிய ஆதரவாளராக சுகததாச என்பவர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
பெரும் தொகை பணத்தை கப்பமாக வழங்க வேண்டும் என இவர் பேரம் பேசுவதுடன் இறுதியில் குறைந்தளவான பணத்தை கொடுத்தாலும் அதனை பெற்று வருகிறார்.
பொதுபல சேனா என்ற துணைப்படையிடம் இருந்து தப்பிக்க பல முஸ்லிம் வர்த்தகர்கள் சுகததாச என்பவருக்கு கப்பம் செலுத்தி வருகின்றனர்.
எவ்வாறாயினும் இலங்கையில் பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்தால், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையர்களுக்கு வழங்கி வரும் வேலைவாய்ப்புகளை நிறுத்தக் கூடும் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFTYLYlq0.html
Geen opmerkingen:
Een reactie posten