தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 mei 2014

இன்டர்போல் தேடும் பல வெளிநாட்டுப் போராளிகள் மலேசியாவில்..!- மலேசியா பொலிஸார்!

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இன்டர்போலால் தேடப்படும் வெளிநாட்டுப் போராளிகள் பலர் மலேசியாவில் பதுங்கி இருப்பதை தாம் அறிந்துள்ளதாக மலேசியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் நடமாட்டத்தை பொலிஸார் தொடர்ந்து கண்காணிப்பதாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பக்கார் தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
வெளிநாட்டு போராளிகளில் சிலரை அடையாளம் கண்டு விட்டோம். பலரைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ள அவர், அண்மையில் கைதான நான்கு போராளிகள் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவாளரான கே.பி என்ற குமரன் பத்மநாதன் மலேசியாவில் வைத்தே கைது செய்யப்பட்டார். இவரும் இன்டர்போலால் தேடப்பட்டு வந்தவர்.
அதேவேளை இலங்கை சேர்ந்த அல்-கைதா அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டமை குறிப்பிட்டதக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZko4.html

Geen opmerkingen:

Een reactie posten