தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 10 mei 2014

தமிழ் பிள்ளைகளை எனது சொத்துக்கள்; சொந்தம் கொண்டாடுகின்றார் ஜனாதிபதி

முதலமைச்சர் “CVயை” நிராகரித்த தென்னிலங்கை

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பொது வேட்பாளராக நியமிப் பதற்கென தேவை ஏதும் இல்லை. தேவை ஏற்படும் பட்சத்தில் அவருடன் பேச்சு நடத்துவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்ஜனநாயகக் கட்சி ஆகியன தெரிவித்துள்ளன.
அதேசமயம், விக்னேஸ்வரனை நியமிப்பதில் தவறில்லை என்றும் பெரும்பான்மை சமூகத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் தலைவரின் தேவை அவசியமானது என்றும் ஜே.வி.பி. கூறியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொருத்தமானவர் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பிலேயே அந்தக் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர் இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்ததாவது வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் அல்லது வேறு ஒருவரைப் பொது வேட்பாளராக நியமிப்பதா என்பது குறித்து நாம் இதுவரையில் முடிவெடுக்கவில்லை. அதற்கான அவசியம் இப்போதைக்கு இல்லை என்று நினைக்கின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். நாட்டின் ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் இது. இதன்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே பொது வேட்பாளருக்கான தேவை இருக்கும்.
விக்னேஸ்வரனை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் வந்துள்ளதே தவிர சரியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்றார்.
இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்ததாவது:
ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நியமிப்பது தவறில்லை. அவருக்கு அதற்கான உரிமையும் தகுதியும் உள்ளது. எனினும் மூவின மக்களின் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலின் போது அவசியமானது.
எனவே தமிழர்களின் முழுமையான வாக்குகள் அவசியம் என்பதைப் போலவே சிங்கள மக்களின் வாக்குகளும் அவசியம். பிரதான எதிர்க்கட்சியாகவோ அல்லது பொது எதிர்க்கட்சியாகவோ இணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற வேண்டியதொரு தேவை உள்ளது. எனவே அதற்கு ஏற்றால் போலவே வேட்பாளரையும் நியமிக்க வேண்டும்.
எனினும் மக்கள் விடுதலை முன்னணியினரைப் பொறுத்த மட்டில் பொது வேட்பாளராக நியமிக்கப்படுபவர் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தாதவராகவே இருக்க வேண்டும் என்றார்.
http://www.jvpnews.com/srilanka/68746.html

கருத்து வெளியிட மறுத்த சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்கும் நோக்கில், சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் புலனாய்வு முகவர் தகவல்களைத் திரட்டியது தொடர்பாக கருத்து வெளியிட அமெரிக்கா மறுத்துள்ளது.
இந்திய அதிகாரிகளாலேயே இதுபற்றி விசாரிக்கப்படுவதால், அதுகுறித்து அவர்களிடமே கேட்டறியும் படியும், மேலதிகமாக எந்த கருத்தையும் வெளியிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அதிகாரிகள் இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளனரா என்று எழுப்பிய மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், இதுகுறித்த தன்னால் மேலதிகமாக எதையும் கூறமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/68750.html

தமிழ் பிள்ளைகளை எனது சொத்துக்கள்; சொந்தம் கொண்டாடுகின்றார் ஜனாதிபதி

மாணவர்களை டொலர்களுக்குப் பணயம் வைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நடவடிக்கைகளுக்கு தூதரகங்களும் நிதி உதவி வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மாணவர்களை தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்குப் பலியாக்க வேண்டாம் என்று அரசியல்வாதிகளைக் கேட்டுக் கொண்டார்.
அநுராதபுரம் தலாவ மகா வித்தியா லயத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள மஹிந்தோதய தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வுகூடத்தை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பில் சிலருக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த கல்வி முறையை நாம் அனைத்துக் கிராமங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளோம் இதன் பயனாக கிராமத்திலுள்ள மாணவர்களும் தற்போது உலகளவில் தமது திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைந்த போதும் இதனைப் பொறுக்காத சில சக்திகளும் எங்கள் மத்தியில் உள்ளன, கல்வியை சாதாரண பிள்ளைகளும் எளிதாக பெற்றுக்கொள்ளும் வகையில் கிராமங்களுக்குக் கொண்டு வந்தமையின் பிரதிபலனே இது.
கணனி தொழில் நுட்பம் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் நாம் தற்போது கிராமிய மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இதன் மூலம் பயனடையும் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவது அவசியமாகும்.,
அரசாங்கம் என்ற வகையில் நாம் கிராமிய கல்வித் துறைகளை முன்னேற்றி வருகையில் சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர், கிராமிய இளைஞர்கள் முன்னேறுவதை அவர்கள் விரும்பவில்லை.
இத்தகையோருடன் நான் கலந்துரையாடும் போது அவர்களின் நோக்கங்களை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, ஆனால் நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்ததை வழங்க வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்.
நாம் ஆட்சி அமைத்த காலத்திலிருந்து மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.
நாம் கிராமம் நகரம் என்று எந்த மாணவர்களையும் பிரித்துப் பார்ப்பதில்லை. அதேபோன்று வடக்கு தெற்கு மலையகம் என்றும் பேதப்படுத்திப் பார்ப்பதில்லை.
வடக்கில் பிள்ளைகள் திசை திருப்பப்பட்டதைப் போன்று தெற்கு பிள்ளைகளும் திசைதிருப்பப்பட்ட யுகம் ஒன்றிருந்தது, எவரது டொலர்களுக்கும் வேறு விதங்களில் செயற்படும் சக்திகளுக்கும் எமது பிள்ளைகளை அடிமைப்படுத்த முடியாது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
நாம் நாட்டைக் கட்டியெழுப்பும் அதேவேளை நல்லொழுக்கமுள்ள எதிர்கால சந்ததியையும் உருவாக்குவது முக்கியம், இதனை அரசாங்கம் தனித்து முன்னெடுப்பதென்பது முடியாத காரியம்.
எத்தகைய சட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தினாலும் இதனை நிறுத்த முடியாது. அவ்வாறெனில் ஒவ்வொரு வீட்டுக்கும் காவலுக்கு பொலிஸாரை நிறுத்த வேண்டிவரும்.
நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இல்லாமற்போனது எமது சொத்துக்களான பிள்ளைகளே. பொதுவாக 1971, 1989 போன்ற காலங்களில் இதுவே நடந்தது. டயர்களில் அழிக்கப்பட்டது எமது சொத்துக்களே.
யுத்தத்தின் போது வடக்கில் பிரபாகரனினால் தமிழ் பிள்ளைகள் சீரழிக்கப்பட்டார்கள் இவர்கள் எமது சொத்துக்கள், இதன் மூலம் இளைஞர் பலம் இழக்கப்பட்டுள்ளது இதேபோன்று தெற்கிலும் நடைபெற்றுள்ளது.
இவையனைத்திலும் நாம் இழந்தது எமது சொத்துக்களையே, இவற்றைக் கவனத்திற்கொண்டு எமது பிள்ளைகளை வளர்ப்பதில் அனைவரும் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/68756.html

Geen opmerkingen:

Een reactie posten