குருணாகல் பிரதேசத்தில் காவல்துறைக்கே சவால்
கடமையில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலைச் சம்பவமானது காவல்துறையினருக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகும் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஆயுதங்கள் எடுத்துச் செல்லாமை காவல்துறை உத்தியோகத்தர்களின் பிழை என்ற போதிலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டியது காவல்துறையினரின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 20 பேரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்க ஒரு மில்லியன் ரூபா சன்மானம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது பற்றி இன்னமும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/68731.html
சீனா விடயத்தில் எதிர் நிலைப்பாட்டில் இலங்கை?
சீனாவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. வியட்நாமிற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை ஒன்றின் போது, இலங்கை அரசாங்கம் வியட்நாமிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்பரப்பு தொடர்பில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. அமைதியான வழிகளில் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை எட்ட வேண்டுமென இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் வெசாக் தினம் இம்முறை வியட்நாமில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் ஜயரட்ன விட்நாமிற்கு விஜயம் செய்துள்ளார். இலங்கை பிரதமர் ஜயரட்ன, அந்நாட்டு பிரதமர் நகுயான் டான் தூங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/68734.html
யாழ். பல்கலைக்கழக சூழலில் இனந்தெரியாதோரின் நடமாட்டம்; முறையிட்டால் நடவடிக்கை
யாழ். பல்கலைக்கழக சூழலில் இனந்தெரியாதோரின் நடமாட்டம் மற்றும் அவர்களின் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக சூழல் மற்றும் வளாகத்திற்குள் இனந்தெரியாதோரின் நடமாட்டம் மற்றும் அவர்களது அச்சுறுத்தல் தொடர்பிலான செயற்பாடுகள் குறித்து இதுவரை முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை.
யாழ். பல்கலைக்கழகம் ஆனது கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பானது. எனவே இனந்தெரியாதோரின் செயற்பாடு குறித்து உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கோ அல்லது யாழ்ப்பாணம் பொலிஸாருக்கோ முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, நீண்ட காலமாக யாழ்.பல்கலைக்கழக சூழலில் இனந்தெரியாதோரின் நடமாட்டம் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலான விசாரணைகள் என்பன இடம்பெறுவதாக மாணவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/68743.html
Geen opmerkingen:
Een reactie posten