[ சனிக்கிழமை, 03 மே 2014, 05:21.49 AM GMT ]
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் யாழ். அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். அரியாலை ஆசீர்வாதப்பர் வீதியால் உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர். இதன் பொழுது அப்பெண் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளார்.
அப்பொழுது வீட்டுக்கு வெளியில் வெயிலின் கொடுமை தாங்க முடியாத நிலையில் கதிரையில் அமர்ந்திருந்த வயோதிபர் ஒருவர், தான் அமர்ந்திருந்த கதிரையை கொள்ளையர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை நோக்கி வீசி எறிந்துள்ளார்.
அதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் நிலைதடுமாறி நிலத்தில் விழுந்துள்ளனர்.
இதன்பொழுது ஒரு இளைஞனை அப்பகுதியில் ஒன்று கூடிய மக்கள் பிடித்துள்ளனர்.
மற்றைய இளைஞர் தப்பியோடியுள்ளார். அவ்வாறு தப்பியோடிய இளைஞனையும் நாயன்மார்கட்டுப் பகுதியில் இளைஞர்கள் பிடித்துள்ளார்கள்.
பெண்ணிடம் அபகரிக்கப்பட்ட சங்கிலியும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த இரு இளைஞர்களும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கைவேலிப் பகுதியைச் சேர்ந்த 18, 19 வயதுடைய சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரும் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFTXLYmu0.html
முல்லைத்தீவுக் கடலில் கைதான 54 பேரும் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
[ சனிக்கிழமை, 03 மே 2014, 05:05.52 AM GMT ]
முல்லைத்தீவில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த படகினை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போது அவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றது கண்டுபிடிக்கப்படது. அதனைத் தொடர்ந்து குறித்த 54 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 30 ஆண்களும், 11 பெண்களும், 13 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் திருகோணமலையில் வைத்து மேலதிக விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை கடைசியாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 4ம் திகதி காலிக் கடலில் வைத்து 70 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டமைக்குப் பிறகு இதுவே கைப்பற்றப்பட்ட படகு என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFTXLYmuz.html
Geen opmerkingen:
Een reactie posten