தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 6 mei 2014

கொழும்பில் 4 கடும்போக்குடைய அமைப்புக்கள் இயங்குகின்றன!- அமெரிக்க இரகசிய ஆவணம்

கொழும்பு நகரில் கடும்போக்குடைய 4  அடிப்படைவாத அமைப்புகள் இயங்கி வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தில் விசாரணை அதிகாரியாக பணியாற்றிய எம்.ஐ. காதர் என்பவர் இந்த அமைப்புகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ரகசியமான ஆவணத்தின் அடிப்படையில் சர்வதேச தொடர்புகளை கொண்டுள்ள 13 இஸ்லாமிய அமைப்புகள் இலங்கையில் செயற்பட்டு வருகின்றன.
மிகவும் இரகசியமானது என்ற தலைப்பிட்டு இந்த இரகசிய தகவல்கள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலையில் ஓசாமா என்ற அமைப்பு செயற்பட்டு வருவதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரியான எலக்ஸ் முர் இந்த தகவல்களை அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYkp1.html

Geen opmerkingen:

Een reactie posten