[ செவ்வாய்க்கிழமை, 06 மே 2014, 12:11.22 AM GMT ]
இலங்கை, கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ஜாகீர் ஹுசேன் கடந்த வாரம் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் ஏற்கனவே ஒரு வார காலமாக கியு பிரிவு காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில், ஜாகீர் ஹுசேனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றில் பொலிஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை பரிசீலித்த மாஜிஸ்திரேட் ஜாகீர் ஹுசேனை 9 நாள் பொலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து கியூ பிரிவு காவற்துறையினர் ஜாகீர் ஹுசேனை பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் இருந்து அழைத்துச் சென்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFTaLYkp4.html
சர்வதேசத்தின் மத்தியில் இருக்கிறோம் என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும்!- ஆங்கில ஊடகம்
[ செவ்வாய்க்கிழமை, 06 மே 2014, 12:02.55 AM GMT ]
இலங்கை அரசாங்கம் செய்யத் தவறிய விடயங்களை சுட்டிக்காட்டியே சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன.
இந்த அழுத்தங்களை சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்படுவதன் ஊடாக தவிர்த்துக் கொள்ள முடியும்.
ஆனால் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை எதிரிகளாக பார்க்கிறது.
தாம் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றி தனித்து செயற்பட முடியாது என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது.
இது நாட்டுக்கு மிகப்பெரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFTaLYkp3.html
Geen opmerkingen:
Een reactie posten