தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 பேரின் அகதி அந்தஸ்துக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க தீர்மானம்!

நவுரு தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் 21 பேரின் அகதி அந்தஸ்துக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர்  மொரிசன் மேற்கொண்ட அறிவித்தலின் பிரகாரம், நவுரு மற்றும் பப்புவா நியூகினியாவின் மானுஸ் தீவில் தமது புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70ஐ எட்டியுள்ளது.
சுமார் 250 பேர் சுயவிருப்பத்தின் பேரில் சொந்த நாடுகளுக்கு திரும்பினார்கள் எனவும் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக
குறைந்துள்ளது எனவும் .மொரிசன் தெரிவித்தார்.
சமகால அரசாங்கம் ஆட்சிபீடமேறியதைத் தொடர்ந்து Operation Sovereign Borders என்ற திட்டத்தின் கீழ் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதகவும் தற்போது சுமார் 1200 பெயர் மாத்திரம் உள்ளதாகவும் ஏனையோர் சுய விருப்பத்தின் பெயரில் நாடுகளுக்கு சென்றுள்ளதாக மொரிசன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRZLZks6.html

Geen opmerkingen:

Een reactie posten