தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவின் சிலாங்கூர் பிரதேசத்தில் இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த 15ஆம் திகதி மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேகநபர்கள் மூவரும் கைதாகியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க இவர்கள் முயற்சித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கடந்த 2004ஆம் ஆண்டு மலேசியா சென்றுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்து நிதி சேகரிக்கும் முயற்சிகளில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளனர். சந்தேகநபர்கள் குடுவரவுச் சட்டத்தின் கீழ் மலேசியாவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/70517.html
Geen opmerkingen:
Een reactie posten