[ சனிக்கிழமை, 24 மே 2014, 08:56.08 AM GMT ] [ பி.பி.சி ]
தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு நரேந்திர மோடி விடுத்த அழைப்பை பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஏற்றுக் கொண்டு புதுடில்லி செல்வார் என அவரது பேச்சாளர் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ள பாகிஸ்தானிய அரச தொலைக்காட்சி, அந்தப் பயணித்தின்போது அவர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து பேசுவார் என செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பதவியேற்பு விழாவையொட்டி நவாஸ் ஷெரீஃப் ஒருநாள் பயணமான புதுடில்லி செல்வார் என அவரது கட்சியின் பேச்சாளர் சித்திக் அலி ஃபரூக் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணம் இந்தியப் பாகிஸ்தான் உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைக்கும் எனவும், இந்தியாவுடன் நல்லுறவை நவாஸ் ஷெரீஃப் விரும்புகிறார் எனவும் அவரது ஊடக ஆலோசகர் தாரிக் அசீம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு வருவது ஒரு “நல்ல செய்தி” என்று பாஜக பேச்சாளர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் டில்லி செல்கிறார்.
மஹிந்த ராஜபக்சவின் வரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டில்லியில் கருப்புக் கொடி கண்டனப் போராட்டம் ஒன்று நடைபெறும் என மதிமுக கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZkoy.html
ராஜபக்ச விவகாரம்: தமிழக கட்சிகள் மீது மோடி அதிருப்தி
[ சனிக்கிழமை, 24 மே 2014, 09:18.08 AM GMT ]
பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கிறது. வருகிற 26–ந் தேதி நரேந்திரமோடி, பிரதமராக பதவியேற்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அவர் மோடி பிரதமராக பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ச.ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
ராஜபக்சவை அழைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து புதுடெல்லியில் நேற்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய வைகோ, ‘கொடுங்கோலன் ராஜபக்சவின் வருகையை கண்டித்து மே 26ம் தேதி காலை 11 மணி அளவில் தலைநகர் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ம.தி.மு.க. சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி அறப்போர் நடத்துவோம் என்று வைகோ இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ராஜபக்சவின் இந்திய வருகை தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் மீது நரேந்திர மோடி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தனது ‘டுவிட்டரில்’ கருத்து வெளியிட்டுள்ள மோடி, ‘மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நிர்வகிப்பது, தாங்கள் அல்ல... மத்திய அரசுதான் என்பது தெரியாமல் இலங்கை அதிபருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டின் கட்சிகள், உள்ளன’ (Similarly all TN partz who r opposing srilankan president's invtation dnt knw, itz central govt which manages release of ur fishermen not u.) என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZkoz.html
Geen opmerkingen:
Een reactie posten