[ திங்கட்கிழமை, 05 மே 2014, 06:51.24 AM GMT ]
28 வயதான இந்த பெண்ணுக்கு ஏற்கனவே 8 மற்றும் 5 வயதான பிள்ளைகள் இருக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர், பெண்ணின் கணவர் பெண்ணை விட்டு பிரிந்து சென்று விட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த மூன்றாம் திகதி மதியம் வேலைக்கு சென்று திரும்பிய இந்த பெண் தனது வீட்டில் இந்த குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இது குறித்து குடும்ப சுகாதார அதிகாரிக்கு பிரதேசவாசிகள் தெரியப்படுத்தியதை அடுத்து, சுகாதார அதிகாரின் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சந்தேக நபரான அந்தப்பெண் வீட்டு முற்றத்தில் எதனையோ தேடிக் கொண்டிருந்ததுடன், குடும்ப சுகாதார அதிகாரியை கண்டதும் வீட்டுக்குள் ஓடியுள்ளார்.
இதன் பின்னர் வீட்டை சோதனையிட்ட போது அலுமாரியில் இருந்து ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் வெலிமடை வைத்தியசாலையில் சம்பந்தப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலை அதிகாரிகள் செய்த முறைப்பாட்டை அடுத்து வெலிமடை பொலிஸார் பெண்ணை கைது செய்ததுடன், சிகிச்சைக்காக தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlv3.html
கனேடிய வாழ் புலம்பெயர் தமிழர்கள் நாடோடிகள்: முஸ்லிம் அமைச்சர் சாடல்
[ திங்கட்கிழமை, 05 மே 2014, 07:24.37 AM GMT ]
நாடோடிகளுக்கு கனேடிய புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் ஒரே வித்தியாசம் தான் காணப்படுகின்றது. நாடோடிகளிடம் பணமில்லை, கனேடிய புலம்பெயர் தமிழர்களிடம் பணம் உள்ளது.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நிகரானவர்கள் உலகம் முழுவதிலும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.
அதில் அதிகளவானர்கள் கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் அந்நாட்டு அரச நிர்வாகத்துடனும் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.
இதனால் தமிழர்களின் கோரிக்கைக்கு ஏற்ப புலிகளுக்கு கனடா சட்ட ரீதியாக அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
கனேடிய தமிழர்கள் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கவலைபட்டதில்லை. புலம்பெயர் என்ற பெயரில் பல தமிழ் அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன.
போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அஸ்வர் தெரிவித்துள்ளார்.
புலிகளுடன் தொடர்புடைய அமைப்புக்களை தடை செய்ய முடியாது என கனடா அறிவித்தமை தொடர்பில் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அஸ்வர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlv5.html
Geen opmerkingen:
Een reactie posten