[ செவ்வாய்க்கிழமை, 06 மே 2014, 02:22.40 PM GMT ]
அரசியல் போராட்டத்தை நாம் வலுப்படுத்தி எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும்.
சுதந்திர தமிழீழம் என்ற 1977ம் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதற்கு மக்கள் கொடுத்த ஆணையும் முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைந்து விடவில்லை, இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கின்றது.
இதுவே தாயக மக்கள் வெளிக்காட்டிய தன்னெழுச்சியின் முழக்கமும் ஐநா பேரணியில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்டு நீதி கோரியதும்.
நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
http://www.tamilwin.com/show-RUmsyFTaLYks6.html
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்த பொதி: அதிர்ச்சியில் சுங்க அதிகாரிகள்
[ செவ்வாய்க்கிழமை, 06 மே 2014, 01:58.58 PM GMT ]
பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி இலங்கைக்கு கூரியர் மூலம் பொதியொன்று அனுப்பப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அப்பொதியினை இன்று சோதனையிட்ட போது 7 இலட்சம் பெறுமதியான 232 கிராம் ஹெரோயின் போதை பொருள் அதற்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவி ஒன்றில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரி லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், இலங்கையைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTaLYks2.html
Geen opmerkingen:
Een reactie posten