தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 mei 2014

கனடாவின் வன்குவார் பகுதியில் வாழ்ந்து வந்த இலங்கை பெண் ஒருவர் நாடு கடத்தப்படக் கூடிய அபாயம்;

குறித்த இலங்கைப் பெண் கனடாவின் வன்குவார் பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கனேடியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட ஜனினா இபாரா என்ற பெண்ணே இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றார். 15 வயதில் இபாரா கனடாவைச் சென்றடைந்ததாகவும், அவருக்கு தற்போது 10 மற்றும் 7 வயதுகளில் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இபாராவை கனேடிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்திருந்தனர். குடும்பத்தை பிரித்து ஜனினாவை இலங்கைக்கு நாடு கடத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவரது கணவர் எலிசானோ இபாரா தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்னதாக ஆவணமொன்று காணாமல் போன காரணத்தினால் இவ்வாறான நெருக்கடிகளை தமக்கு எதிர்நோக்க நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட ஆவணமொன்று கனேடிய குடிவரவு திணைக்களத்திலோ அல்லது கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலோ தொலைந்ததினால் இபாரா இந்த நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜனினாவின் கணவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
- See more at: http://www.canadamirror.com/canada/25561.html#sthash.b7AWaQOF.dpuf

கனடா- பிரிட்டிஷ் கொலம்பியாவில் 14-வருடங்கள் வாழ்ந்த இரண்டு குழந்தைகளின் தாய் நாடுகடத்தப்படுவாரா?


இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் கனடா எல்லைப்பகுதிகள் சேவை முகாமையினர்களால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ளார்.
ஜனினா லிபாரா எனப்படும் இப்பெண் வன்கூவரில் கடந்த 14-வருடங்களாக வசித்து வருகின்றார். தனது 15-வது வயதில் கனடா வந்தவர். கனடியர் ஒருவரை திருமணம் செய்து 7-வயது மற்றும் 10-வயது ஆண்குழந்தைகளின் தாயாராவார்.
10-வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற எழுத்தர் வகைப்பணி தவறு காரணமாக தான் நாடுகடத்தப்படலாமென கூறியுள்ளார். இவர் கனடிய குடியுரிமை பெற விண்ணப்பித்தபோது இவரது சிறிலங்கன் கடவுச்சீட்டு – குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணம்- கனடிய குடிவரவிற்கும் சிறிலங்கன் தூதரகத்திற்கும் இடையில் எங்கேயோ தவறிவிட்டது.
இப்பிரச்சனைக்கு தீர்வுகாண லிபாரா பல வருடங்களாக முயன்ற போதும் அவரால் கனடிய குடியுரிமை பெற முடியவில்லை. இறுதியல் ஏமாற்றத்தினால் முயற்சியை கைவிட்டு விட்டார். அது ஒரு தவறு என அவர் இப்போது நன்கு அறிந்துள்ளார்.
எனது கணவர் கனடிய குடிமகன்.  பிள்ளைகள் இருவரும் இங்கு பிறந்தவர்கள். இது மனதைக் கலக்குகின்றதென CTV வன்கூவர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். இது ஒரு தூக்கிவீசப்பட்ட வழக்கு என பலர் நினைக்கின்றனர். சட்ட சம்பந்தமான விடயங்களில்  எவ்வளவு  இன்னல்கள் என்பது பலருக்கு புரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களிற்கு முன்னர் இவரது வன்கூவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் வந்து உங்களை கைது செய்கின்றோம் என உரக்க கத்தி கைவிலங்கிட்டு ஆயுதங்கள் இருக்கின்றனவா என அறிய உடல் பரிசோதனை செய்து அழைத்து சென்றனரென கூறியுள்ளார்.
குடிவரவு வழக்கறிஞர் லோரன்ஸ் வொங் லிபாரா சிறிலங்காவிற்கு திரும்பிச் செல்லும் படி வற்புறுத்த படுவார் என்பதில் தான் சந்தேகப் படுவதாக கூறியுள்ளார். கணவர் கனடிய பிரசையாகவும் பிள்ளைகள் கனடாவில் பிறந்தவர்களாகவும் இருக்கும் போது நாடுகடத்தப்படுவது மிகவும் அசாதாரணமான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாய் தனது குடும்பத்தினருடன் கனடாவில் இருக்கலாமென ஒரு வழக்கை உருவாக்க லிபாரா தற்போது முயற்சிப்பதாக கூறப்பட்டுள்ளது.
ibbara
- See more at: http://www.canadamirror.com/canada/25583.html#sthash.tdRzaSSY.dpuf

Geen opmerkingen:

Een reactie posten