தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 mei 2014

இலங்கையில் ‘அர்த்தம் புரியாத’ தமிழ் அறிவிப்பு !


இலங்கையில், அரச நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழி பிழையாக எழுத்தப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு – காலி அதிவேக நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைளில் தமிழ் மொழியில் எழுத்தப்பட்டுள்ள அறிவுறுத்தல் பிழையாக எழுதப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ள அந்த அறிவிப்பு பலகையில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள அறிவிப்பில் என்ன கூற வருகிறார்கள், என புரிந்து கொள்வதற்கே தனித் திறமை வேண்டும் (அருகே போட்டோ பார்க்கவும்).
“நாட்டில் இது போன்ற தவறுகள் இனிமேல் இடம்பெற இடமளிக்கப் போவதில்லை. அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக ஆலோசனைகளை வழங்க உத்தரவிடப்படும்” எனவும், அமைச்சர் மேலும் கூறியுள்ளார். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இது தொடர்பாக தமது சம்மந்தியும் வடக்கு மாகாண தமிழ் முதலமைச்சருமான விக்கினேஸ்வரனிடம் ஆலோசனை பெறப்போகிறாரோ, என்னவோ ?

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6783

Geen opmerkingen:

Een reactie posten