தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 september 2014

காணாமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படையினர் மறுப்பு!

அழுத்தங்களின் மத்தியில் வெளிநாட்டு மூலதனங்களை பெறமுடிந்துள்ளது: அஜித் நிவாட்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 03:48.39 AM GMT ]
அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தங்கள் அதிகரித்துள்ள போதும் இலங்கையால் போதுமானளவு வெளிநாட்டு மூலதனங்களை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் அனுசரணையில் ஐக்கிய நாடுகளில் மனித உரிமைகள் தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டது.
எனினும் 2020 ஆம் ஆண்டில் 67 மில்லியன் டொலர்கள் என்ற வெளிநாட்டு மூலதன இலக்கை நோக்கி இலங்கைக்கு சென்று கொண்டிருப்பதாக கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க்கின் புளும்பேக் இணையத்தளத்துக்கு செவ்வியளித்த அவர்,
ஐக்கிய நாடுகளின் அழுத்தம் காரணமாக சில முதலீட்டாளர்களின் அக்கறை குறைந்திருந்தமையும் கப்ரால் ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனினும் அது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தவில்லை என்று கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 7.8 சதவீதமாக விஸ்தரிக்கப்படவுள்ளது.
இதன்மூலம் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியை 2020ஆம் ஆண்டில் 150 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUio1.html
காணாமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படையினர் மறுப்பு
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 04:25.13 AM GMT ]
தமிழகம் பாம்பன் பகுதியில் இருந்து கடலுக்கு சென்று காணாமல் போயுள்ள மூன்று மீனவர்களையும் தேடும் பணிகளை இலங்கையின் நெடுந்தீவு பகுதியில் மேற்கொள்ள இலங்கை கடற்படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி கடலுக்கு தொழிலிற்காக சென்ற நிலையில் படகு பழுதடைந்து கவிழ்ந்தமையால் நான்கு மீனவர்கள் காணாமல் போயினர்.
அதில் ஒருவர் அடுத்த நாள் மீட்கப்பட்டார் எனினும் ஏனைய மூவரையும் இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்தநிலையில் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அவர்களின் சடலங்கள் நெடுந்தீவு கரையில் ஒதுங்கியிருக்கலாம் என்ற அடிப்படையில் பாம்பன் மீனவர்கள் வியாழக்கிழமையன்று தேடுதலுக்காக நெடுந்தீவு கடலுக்கு சென்றனர்.
எனினும் நெடுந்தீவு கடலில் அவர்களை அனுமதிக்க இலங்கை கடற்படை மறுப்பு தெரிவித்தது.
தேடுதலில் ஈடுபட்டவர்களுக்கு உணவுகளை வழங்கிய இலங்கை கடற்படையினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து திருப்பியனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு பாம்பன் மீனவர்கள் தமிழக அரசாங்கத்தை கோரியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUio2.html

Geen opmerkingen:

Een reactie posten