[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 03:04.03 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துள்ளனர்.
இதன்போது பொதுச் சின்னத்தின்கீழ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலின் செய்தியை அவர்கள் சந்திரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவில் திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர, கபீர் காசிம் மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் உள்ளடங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொதுச் சின்னத்தின்கீழ் போட்டியிடுவது குறித்து சந்திரிக்கா சாதகமான பதிலை வழங்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே இந்த யோசனையை ரணில் விக்கிரமசிங்க, ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றிடமும் தெரிவித்திருந்தார்.
எனினும் அந்தக்கட்சிகளும் ரணிலின் யோசனையை நிராகரித்து விட்டன. அத்துடன் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUioz.html
ஐ.நாவின் வாய்மூல அறிக்கைக்கு முன்னர் இலங்கைக்கு பிரதி அனுப்பி வைக்கப்படவுள்ளது
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 03:33.54 AM GMT ]
செப்டம்பர் 24 ஆம் திகதியன்று இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் அந்த அறிக்கையின் பிரதி நியமப்படி 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக இலங்கைக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கைக்கு இலங்கை பிரதிநிதியால் பதில் வழங்க முடியும் என்று அமைச்சு சுட்டிக்காட்டிள்ளது.
இலங்கை பெரும்பாலும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கான பதிலை 25ஆம திகதியன்று வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUio0.html
Geen opmerkingen:
Een reactie posten