“ரொறன்ரோவில் பெருமளவு தமிழ்மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பலர் வெற்றிகரமான தொழில்முனைவர்களாக இருக்கிறார்கள். இந்த வலிமையை நாம் ரொறன்ரோவில் உள்ள எல்லாச் சமூகங்களும் பயன்படுமாறு செய்ய வேண்டும்” எனத் திரு ரோறி சொன்னார். “ஸ்ரீ லங்காவுக்குப் பயணம் செய்து அங்குள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பல தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளோடு சந்தித்தவன் என்ற முறையில் நான் தமிழர்களுடைய வரலாற்றைவும் இந்த நகரம் ஒரு சிறந்த நகரமாக உருவெடுப்பதற்கு அவர்களது அன்றாட பங்களிப்புப் பற்றியும் தெரிந்து வைத்துள்ளேன். தமிழ்ச் சமூகத்தின் முழு அளவிலான பங்களிப்பு இன்னும் பயன்படுத்தப் படாமல் இருக்கிறது. அந்த சமூகத்தின் பங்களிப்பை ஏனைய சமூகங்களும் பயன்பெறுமாறு செய்வதற்கு நாங்கள் மேலும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டிய அவசியத்தை நிச்சயப்படுத்த வேண்டும்” என திரு ரோறி தெரிவித்தார். மேலும் பேசுகையில் “நான் மேயராகத் தெரிவு செய்யப்பட்டால் அவைத் தலைவர் (திரு சி.வி.கே. சிவஞானம்) மூலமாக ரொறன்ரோவுக்கு வருகை தருமாறு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களுக்கும் தீவில் தெரிவுசெய்யப்பட்ட ஏனைய அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு அனுப்புவேன்” எனக் குறிப்பிட்டார்.
இங்குள்ள தமிழ் அமைப்புக்களை ஒன்றுபடுத்தி மாநகர அரசு எவ்வாறு ஒரு தமிழ்ப் பண்பாட்டு மையத்தையும் மூத்தோர் காப்பு இல்லத்தையும் அமைக்க உதவியாக இருக்க முடியும் என்பதற்கான வழிவகைகள் ஆராயப்படும் என்பதற்கான வாக்குறுதியையும் அளித்தார். எல்லோருக்கும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, இளைஞர் மத்தியில் காணப்படும் வேலையின்மை விழுக்காட்டை குறைப்பது, போக்குவரத்தை மேம்படுத்தல், ரொறன்ரோவில் முதலீடு செய்யத் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பது ஆகியவற்றைச் செய்யப் போவதாகவும் திரு ரோறி தெரிவித்தார்.
அண்மையில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு யோன் ரோறி அவர்களுக்கு ரொறன்ரோ வாக்காளர் மத்தியில் 48 விழுக்காடு ஆதரவு இருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. இது சம அளவு 26 விழுக்காடு ஆதரவோடு இருக்கும் Olivia Chow மற்றும் Doug Ford இருவரையும் விட குறிப்பிடத்தக்க இடைவெளியாகும்.
Geen opmerkingen:
Een reactie posten