[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 02:31.18 PM GMT ]
இந்த சம்பவம் இன்று அமைச்சரை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இடம்பெற்றது.
பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதில் வழங்கினார்.
வெளிநாட்டமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ், நோனிஸ் மீது அமெரிக்காவில் வைத்து தாக்குதல் நடத்தியமையை அடுத்தே இந்த சம்பவம் இடம்பெற்றதாக வெளியான தகவல் குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
இதன்போது நோனிஸ் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் கேள்விகளை எழுப்பியபோது, அமைச்சரின் அலுவலர் ஒருவர், வெளிநாட்டமைச்சர் ஜீ.எல் பீரிஸுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவினார்.
இதன்போது நோனிஸின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை என்று அமைச்சர் பீரிஸ் பதிலளித்தார்.
இதனையடுத்தே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, நோனிஸ் பதவி விலகியதாக கூறிய தகவலை திரும்பப் பெற்றுக்கொண்டார். அத்துடன் தமது தகவலுக்காக வருத்தத்தையும் தெரிவித்தார்.
இதன்போது கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், அரசாங்க பேச்சாளர் ஒருவர் இவ்வாறான தவறு விட்டுள்ளமை குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தாம் தவறு செய்தமையை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்தி- சஜின் வாஸ் தாக்குதல்! பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் ராஜினாமா
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgv4.html
பொதுபலசேனா, இஸ்லாத்தை அவமதிக்கிறது!- அசாத் சாலி
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 03:06.43 PM GMT ]
கடந்த 28ம் திகதியன்று இடம்பெற்ற பொதுபலசேனாவின் பொதுச்சபை அமர்வின் போது அந்த அமைப்பு இஸ்லாத்தை அவமதிப்பு செய்துள்ளது என்று சாலி குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த அசாத் சாலி, பொதுபலசேனாவின் அமர்வு ஒரு பௌத்த அமைப்பின் அமர்வு அல்ல என்று கூறினார்.
தலாய் லாமாவுக்கு நாட்டுக்குள் வர அனுமதிக்காத அரசாங்கம், மியன்மாரில் முஸ்லிம்களின் இறப்புக்களுக்கு காரணமான விராது தேரருக்கு நாட்டுக்குள் வர அனுமதியளித்தது.
இலங்கையின் பெயரை சிங்ஹாலய என்று மாற்றவேண்டும் என்று அந்த அமைப்பு நிறைவேற்றிய தீர்மானம் கண்டித்தக்கது என்றும் சாலி கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgv5.html
துப்பாக்கிகளுடன் பிக்குகள் நடமாட்டம்: பீதியில் மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 03:07.38 PM GMT ]
அல்வத்தைப் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற 50 ஏக்கர் காணிப் பகுதியில் ஆயுதம் தாங்கிய பிக்குகளின் நடமாட்டம் இருப்பதாக இறத்தோட்டை பிரதேச சபை உறுப்பினர் திலக்குமார சிறி தெரிவித்தார்.
இறத்தோட்டை பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் 29 ஆம் திகதி காலை அதன் தலைவர் ஜயந்த புஸ்பகுமார தலைமையில் நடைபெற்ற போதே சபை உறுப்பினர் குமாரசிறி இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு செய்த போது நெற்றியில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறேன் என்று திலக்குமார சிறி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
அல்வத்தைப் பகுதியில் கடந்த சில சீருடை தரித்த பிக்குமார் சிலர் துப்பாக்கிகளை ஏந்திய வண்ணம் நடமாடித் திரிகின்றனர்.
இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பீதிக் குள்ளாகியுள்ளனர். உயர் ரக வாகனங்களில் வந்திறங்கும் இவர்கள் இங்கு கைவிடப்பட்ட நிலையிலுள்ள சுமார் 50 ஏக்கர் காணிப் பகுதியிலேயே இவர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.
இது பற்றி பொலிஸாரிடம் நான் முறைப்பாடு செய்திருந்தேன். இதனால் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து கொலை பயமுறுத்தல் செய்யப்பட்டு எனது பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ் பெற வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.
குறிப்பிட்ட காணிப் பகுதியின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இக்காணிப் பகுதியில் விஜயபால மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட குகையுடன் கூடிய சுரங்கப்பாதையொன்று இருப்பதாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உண்டு.
இங்கு ஏதேனும் புதையல் இருக்கலாம் என்றும் அதை தோண்டி எடுப்பதற்கே இந்த ஆயுததாரிகள் முயன்று வருவதாக மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எது எப்படியாயினும் சீவர உடை தரித்துக்கொண்டு பயங்கர துப்பாக்கிகளை பகிரங்கமாகவே ஏந்தித் திரிவதும் அதன் காரணமாக மக்கள் மத்தியில் திகிலை உருவாக்குவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே, பிரதேச சபை இவ்விடயத்தில் தலையிட்டு மக்கள் மத்தியில் அமைதிச் சூழலை ஏற்படுத்த முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgv6.html
Geen opmerkingen:
Een reactie posten