தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு



திருகோணமலை அரச அதிபரை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்- நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 08:57.10 AM GMT ]
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வாவுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்குமாறு கோரி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
திருகோணமலை நகரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன் அதில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களை வாட போடா என்று அழைக்காத அரசாங்க அதிபர் ஒருவர் வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சகலவற்றையும் நிராகரிப்பதாக அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அரசாங்கத்திற்கு எதிரான சதி வேலைத்திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெமிதிரிய செயற்திட்டத்தை நடைமுறைபடுத்துமாறு நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்
நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட கெமிதிரிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா, கரவனெல்ல, மொனராகலை, இரத்தினபுரி உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆா்ப்பாட்டத்தின் போது கெமிதிரிய திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனா்.
நுவரெலியா நகரிலும் கெமிதிரிய திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டம் சினிசிட்டா மண்டபத்திலிருந்து நுவரெலியா தபால் நிலையம் வரை ஊா்வலமாக சென்றது.
இதில் கெமிதிரிய திட்டத்தின் 5000ற்கும் மேற்பட்ட அங்கத்தவா்கள் பங்கேற்றிருந்தனா்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சா் பசில் ராஜபக்ஷவிற்கும் கையளிக்குமாறு மகஜா் ஒன்று அமைச்சா் நவீன் திஸாநாயக்கவிடமும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் இராதாகிருஷ்ணணிடமும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் கையளித்தமை குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgo2.html
தேர்தலுக்கு அவசரம் வேண்டாம்! அமைச்சர்கள் வலியுறுத்தல்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 09:03.08 AM GMT ]
தற்போதைய நிலையில் அவசரப்பட்டு தேர்தல்களை நடத்தும் முடிவை எடுக்க வேண்டாம் என்று அமைச்சர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அரசாங்கம் என்னதான் பூசி மெழுகினாலும் தோல்விப் பயம் ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது.
அதிலும் குறிப்பாக அடுத்த பிரதமர் கனவில் இருக்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இருந்தும் இந்த நிலையிலும் திடீர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றின் மூலம் அரசாங்கத்தின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்பார்க்கின்றார்.
ஆனால் எதிர்பார்ப்பதை விட நிலைமைகள் மோசமாக இருப்பதாக அமைச்சர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அரசாங்கத்தின் சரிந்துள்ள செல்வாக்கை மீண்டும் சரிக்கட்டும் வரையில் தேர்தல்களை நடத்த அவசரப்படக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் இதே நிலைப்பாட்டிலேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgo3.html

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 09:17.16 AM GMT ]
சுவிசில் உணர்வெழுச்சியுடன்  தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், முதல் களப்பலியான பெண் போராளி 2ம் லெப். மாலதி, சிறிலங்கா அரசின் சதியால்  படுகொலை செய்யப்பட்ட லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் கேணல் சங்கர், கேணல் ராயூ ஆகியோரோடு தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் முதல் களப்பலியான மாவீரர் லெப். பரமதேவா அவர்களினதும் 30 வது ஆண்டு நினைவுகள் சுமந்த எழுச்சி நிகழ்வானது 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பாசெல் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க  நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடிஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தபட்டு, உறுதிமொழியுடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் சிறுவர்களாலும், இளையோர்களாலும் எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்பட்டன.
மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள்,  இளையோர்களின் எழுச்சி நடனங்கள், மற்றும் காலத்திற்கேற்ப கருப்பொருளை கொண்ட சிறப்புரையோடு தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளின்  வரலாற்றுப் பதிவுகள் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டமைநிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
நீண்ட காலங்களுக்குப் பிறகு பாசெல் மாநிலத்தில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமையானதுமீள்எழுச்சியுடன், மிகவும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன. 
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgo4.html

Geen opmerkingen:

Een reactie posten