தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

பேஸ் புக் ஊடாக யுவதியை ஏமாற்றிய பௌத்த பிக்கு கைது!


மல்வத்து பீடாதிபதி - அமெரிக்கத் தூதுவருக்கிடையில் விசேட சந்திப்பு
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 07:17.41 AM GMT ]
கண்டி மல்வத்து பீடாதிபதிக்கும் அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன் தலைமையிலான தூதர அதிகாரிகள் கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சிறி சுமங்கல தேரரை சந்தித்துள்ளனர்.
இன்று முற்பகல் கண்டி மல்வத்து விஹாரைக்கு சென்ற தூதுவர் சிசன் உள்ளிட்ட அதிகாரிகள், முதலில் நியன்கொட விஜயசிறி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளனர்.
பின்னர் திப்பட்டுவாவே சிறி சுமங்கல தேரரை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டதுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மத நல்லிணக்கம், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgt5.html


பேஸ் புக் ஊடாக யுவதியை ஏமாற்றிய பௌத்த பிக்கு கைது
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 07:39.46 AM GMT ]
பேஸ் புக் சமூக வலையமைப்பின் ஊடாக யுவதி ஒருவரை ஏமாற்றிய பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேஸ் புக் சமூக வலையமைப்பின் ஊடாக அறிமுகமான 18 வயதான யுவதி ஒருவரை காதலித்து ஏமாற்றியதாக 24 வயதான பௌத்த பிக்கு ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரை பொலிஸார் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்னர். இதன்போது எதிர்வரும் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே உத்தரவிட்டுள்ளார்.
பௌத்த பிக்கு குறித்த யுவதியிடம் தம்மை சாதாரண ஓர் இளைஞராக காண்பித்துக் கொண்டுள்ளார் என பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பௌத்த பிக்குவாகவும் சாதாரண இளைஞராகவும் இரட்டை வேடம் போட்ட காரணத்திற்காக கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை வில்கமுவ என்னும் இடத்தைச் சேர்ந்த சமன் புஸ்பகுமார என்ற பௌத்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பௌத்த பிக்கு மற்றுமொரு விஹாரைக்கு சென்று காவி உடையை களைந்து சாதாரண உடையில் யுவதியை பார்வையிடச் சென்றுள்ளார்.
இருவரினதும் புகைப்படங்கள் பேஸ் புக் வலையமைப்பில் பிரசூரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஓர் பௌத்த பிக்கு என்பதனை யுவதியின் பெற்றோர் கண்டறிந்து கொண்டதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgt6.html

Geen opmerkingen:

Een reactie posten