அதே சமயம் எங்களை படையினர் நெருங்கிய நிலையில் காயமடைந்த என் 12 வயது பெண் பிள்ளையை கைவிட்டு விட்டேன். என் பிள்ளையை மீட்டுத் தாருங்கள் என காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியமளித்தார்.
ரவீந்திரன் சந்திரவதனி என்ற மேற்படி தாய் கண்ணீர்மல்க தன் உருக்கமான சாட்சியத்தில்,
2009.04.20ம் திகதி நானும் என் மகன் மற்றும் மகள் ஆகியோர் ஷெல் வீச்சில் காயமடைந்தோம். அதற்குள் படையினர் எம்மை நெருக்கிவிட்டனர்.
படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மகளை அழைத்து வர சென்றபோது படையினர் தடுத்துவிட்டனர்.
தொடர்ந்து ஷெல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமையினால் எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. என் பிள்ளை தர்ஷிகாவிற்கு வயது 12 அவளுக்கு கையிலும் முதுகிலும் காயம் பட்டிருந்தது.
என் பிள்ளைக்கு என்ன நடந்தது? என் பிள்ளை எங்கே? என் பிள்ளையை தேடிக் கொடுங்கள் என அந்தத் தாய் கண்ணீர்மல்க வழங்கிய சாட்சியத்தினால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்களே கலங்கி நின்ற சம்பவம் இன்றைய அமர்வில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாய் இரு கால்களிலும் காயமடைந்து தற்பொழுதும் நடக்க முடியாத நிலையில் இருக்கின்றார்.
இதேவேளை இன்றைய அமர்வில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மக்கள் செல்லும்போது மக்களை நோக்கி சரமாரியான துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டமை தொடர்பிலும் அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இன்றைய அமர்வில் படையினருக்கு எதிராக அதிகளவான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.
- விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தினார்களா?- ஆணைக்குழு எழுப்பிய கேள்விகள்
- புலிகளுக்கு எதிராக ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்குமாறு மக்கள் படையினரால் வற்புறுத்தப்பட்டனர்!
- ஆடு வேண்டுமா எனக் கேட்ட ஆணைக்குழு! திட்டித் தீர்த்த வயதான தாய்
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgw0.html
Geen opmerkingen:
Een reactie posten