[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 12:19.20 AM GMT ]
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்து சென்னையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது,
சென்னை வளசரவாக்கம் அடுத்த ஏ.பி.என். பிரதாப் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு அமுதா, அன்பரசன், தேவி என 3 குழந்தைகள் உள்ளனர். அ.தி.மு.க தொண்டரான வெங்கடேசன் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.
ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பை அறிவதற்காக நேற்று மாலை அவர் வீட்டில் டெலிவிஷனில் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே வீட்டில் இருந்த பெற்றோல் கேனை எடுத்துக் கொண்டு, வெளியே ஓடி வந்த அவர் ‘அம்மா வாழ்க’ என்று கூறியபடி உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் வேதனையில் அவர் அலறினார். இதைக் கண்டதும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவில் அவர் இறந்தார்.
இதுகுறித்து கே.கே. நகர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று தீர்ப்பு வெளியானதை டெலிவிஷனில் பார்த்த விருகம்பாக்கம் தசரதபுரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் பாஸ்கர் (30) என்பவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அருகில் இருந்த அ.தி.மு.க. வினர் மற்றும் பொலிசார் அவரது உடலில் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினார்கள்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhp5.html
ஜெயலலிதா ஜாமின் விண்ணப்பிக்க இயலாது: அரசு வழக்கறிஞர்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 12:38.30 AM GMT ]
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் வாதாடி அரசு வழக்கறிஞர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்த போது சொத்து சேர்த்தது நிரூபணமானதால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்களை, ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் அனுபவித்ததால் அவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி உத்தரவின் பேரில் 4 பேரும் உடனே பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ஜெயலலிதா உடனடியாக ஜாமினுக்கு விண்ணப்பிக்க இயலாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhp6.html
ஜெயலலிதாவுக்கு அரசியல் நிரந்தர பின்னடைவா? - இல்லை என்கின்றனர் அரசியல் அவதானிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 01:26.45 AM GMT ]
கடந்த காலங்களிலும் அவ்வாறான பின்னடைவுகளை தாண்டி மீண்டும் ஆட்சிக்கு வந்தவர் என்ற அடிப்படையில் மீண்டும் ஜெயலலிதாவினால் முன்னுக்கு வரமுடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அனுபவம் மிக்க ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான சோ ராமசாமி, நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு தற்போது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது மக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு அதிகளவான அனுதாபத்தை கொண்டுவந்துள்ளது. உரிய சட்ட ஆலோசனைகள் உதவிகள் கிடைக்குமானால் அவர் மீண்டும் வெளியில் வரலாம் என்று சோ ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
அவர் சிறையில் அடைக்கப்பட்டமையானது அவருக்கு அல்ல. தமிழக அரசுக்கே பின்னடைவை கொண்டு வரும் என்றும் சோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அபிவிருத்தி கற்கை நிறுவகத்தின் பேராசிரியர் ஏ ஆர் வெங்கடாசலபதி இது குறித்து கூறுகையில்,
ஜெயலலிதாவின் எதிர்காலம் ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒன்று. எனினும் மேன்முறையீடுகள் உயர்நீதிமன்றங்களே தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் இருக்கின்ற போது அவரால் ரிமோட் கொன்ரோல் மூலம் கட்சியையும் நிர்வாகத்தையும் சில மாதங்களுக்கு நடத்திச்செல்ல முடியும்.
எனினும் தேர்தல் ஒன்றை அவரால் ரிமோட் கொன்ரோலை கொண்டு செயற்படுத்த முடியாது என்று வெங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் இந்த வெற்றிடத்தை பாரதீய ஜனதாக் கட்சி தமது அரசியல் தக்கவைத்தலுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெங்கடாசலபதியின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ள சமூகவியலாளர் பி மணிகண்டன், பாரதீய ஜனதாக்கட்சி மாத்திரமல்ல ஏனைய கட்சிகளும் தமிழகத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கும் என்று கூறியுள்ளார்.
எனினும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வலுவான அமைப்பினால் தமது எதிராளிகளுக்கு சவால்களை விடுக்க முடியும் என்றும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhp7.html
கிறிஸ்மஸ் தினத்திற்குள் ராகுல், சோனியாவிற்கு சிறை: சுப்பிரமணியன் சுவாமி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 06:44.37 AM GMT ]
ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை “அபாரமானது” என சுப்பிரமணியன் சுவாமி வர்ணித்துள்ளார். அடுத்து சோனியா, ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தனது வேலை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா ஒரு ஊழல்வாதி என்பது நன்றாகவே தெரியும் இதன் அடிப்படையிலேயே 1996ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கை தாக்கல் செய்ததாக சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இது ஒரு இந்தியனாக தமக்;கு பெருமையாக இருக்கிறது” என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மேலும் 100 கோடி ரூபா அபராதமென்பது ஜெயலலிதாவுக்கு பெரிய விடயம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நேஷனல் ஹெரால்ட் செய்தித்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாää மற்றும் ராகுல் காந்திதான் தமது அடுத்த இலக்கு.
எனவே ராகுல், சோனியாவை கிறிஸ்மஸ் தினத்திற்குள் சிறைக்கு அனுப்ப முயற்சிக்கப் போவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhr5.html
Geen opmerkingen:
Een reactie posten