[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 09:06.02 AM GMT ]
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளி என நீதிபதி மக்கேல் டிகுன்ஹா தீர்ப்பளித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
அவருக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.
இதனால் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் தமிழக-கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரப்பன அக்ரஹார பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். ஆனால் 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவில்லை. பின்னர் பிற்பகல் 2.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் பவானிசிங், இந்தவழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்ததாக தெரிவித்தார்.
ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான தண்டனைக்காலம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்தத் தீர்ப்பால் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும் எம்எல்ஏ பதவியையும் உடனடியாக இழக்கிறார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.
2ம் இணைப்பு
தற்போது ஜெயலைதாவை ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன
தண்டனை குறித்து இருதரப்பும் விவாதம்
குறைந்தது 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அரச தரப்பு வக்கீல் வாதம்
குறைந்தது 2 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே விதிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்பொழுது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.
தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டத்தில் குதிப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு என பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVix0.html
ஜெயலலிதா பதவி இழப்பு! அடுத்த முதலமைச்சர் யார்?
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 12:17.15 PM GMT ]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது எம்.எல்.ஏ. பதவி தானாகவே தகுதி இழப்பாகிவிடும் என்பதால் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்துள்ளார்.
கடந்த முறை ஜெயலலிதா, இதேப்போன்று நீதிமன்ற தீர்ப்பால் முதலமைச்சர் பதவி இழந்தபோது அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சராக அப்போது நியமிக்கப்பட்டார்.
ஆனால் இந்த முறை அவருக்கு அந்த வாய்ப்பு மிகக்குறைவுதான் என்று கூறப்படுகிறது. வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன. மேலும் விசாலாட்சி நெடுஞ்செழியன் பெயரும் அடிபடுகிறது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
- முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை! 100 கோடி ரூபா அபராதம்! 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது!
- ஜெயலலிதா குற்றவாளி: பதவி விலகுமாறு அறிக்கைகள்! பற்றி எரிகிறது தமிழகம்! பதற்ற நிலை தொடர்கிறது!
- ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பு! தண்டனை இன்னமும் அறிவிக்கப்படவில்லை!
- சுப்பிரமணியம் சாமி போட்ட முடிச்சு.. சிக்கிக் கொண்ட ஜெயலலிதா...!
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVix6.html
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா: கண்ணீர் விட்டழுத அதிகமுவினர்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 12:57.25 PM GMT ]
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் இன்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா இந்த தீர்ப்பினை அறிவித்தார்.
அதனையடுத்து, மாலை 5 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் பொலிஸார் ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.
இந்நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது குறித்து அறிந்த அதிமுகவினர் கண்ணீர் விட்டு அழுதனர்.
சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவேதான் சென்னை சிறைக்கு அழைத்து வரவில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி பிணை பெறும் வரை இந்த சிறையில் தான் ஜெயலலிதா உள்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVix7.html
தமிழகத்தில் வன்முறைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆளுநர் ரோசையா உத்தரவு!
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 02:24.20 PM GMT ]
சென்னையில் உள்ள ராஜ்பவான் ஆளுநர் மாளிகையில் வைத்து அவர் தமிழக உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டார்.
இதன்போது அதிகாரிகளும் தமிழகத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆளுநருக்கு விளக்கமளித்தனர்.
இதனையடுத்து வன்முறைகளை கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் தமிழகத்தில் தொடர்ந்தும் வன்முறைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
இதன்போது வாகனங்கள் மீது கல்லெறிதல், எரியூட்டல் போன்ற வன்முறைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVhoz.html
ஜெயலலிதா சிறை! கருத்துக்கூற ராஜ்நாத் சிங் மறுப்பு! - தீர்ப்பை மதிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 02:39.31 PM GMT ]
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை குறித்த தீர்ப்பு குறித்து தெ ஹிந்து வினவியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ராஜ்நாத் தம்மால் இது தொடர்பில் கருத்துக்கூற முடியாது.
ஏனெனில் தாம் குறித்த தீர்ப்பை பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா மீதான தீர்ப்பை தாம் மதிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டமையானது நீதிமன்ற தீர்ப்பு என்ற அடிப்படையில் அதனை தாம்; மதிப்பதாக இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ஆனந்த் சர்மா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஊழல் விவகாரம் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே இதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆனந்த் கூறியுள்ளார்.
இந்தியாவின் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதிமன்றங்கள் தமக்குரிய சுதந்திரத்தின் அடிப்படையில் இயங்குகின்றன.
எனவே அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தாம் இந்த தீர்ப்பை மதிப்பதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, தமக்கு எதிரான தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யமுடியும்.
எனினும் இந்த தீர்ப்பு காங்கிரஸை பொறுத்தவரையில் தமக்கான வாய்ப்பாக கருதுவதாக ஆனந்த் சர்மா குறிப்பிட்டு;ள்ளார்.
தற்போது தமிழகத்தை பொறுத்தவரையில் மூன்றாவது நிலையில் உள்ள தமது கட்சி தம்மை பலப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் என்றும் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVho1.html
தமிழகத்திற்கு தலைகுனிவு: ஜெயலலிதாவின் தீர்ப்பு குறித்து விஜயகாந்த் அறிக்கை
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 02:42.56 PM GMT ]
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும், தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்ற இயற்கையின் நியதியை யாராலும் மாற்ற முடியாது.
இதற்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவும் விதி விலக்கல்ல. சுமார் 18 வருடங்கள் நடைபெற்ற இ,ந்த வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்து, ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியில் இருக்கும் போதே தண்டிக்கப்பட்டதால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அதோடு மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
1991 96 ஆகிய ஐந்து ஆண்டுகளுக்கு 60 ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கிய ஜெயலலிதா 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது எப்படி என்பதுதான் வழக்கு. வழக்கு தொடரப்பட்ட 1997ம் ஆண்டில் இருந்து இன்று வரை இந்த ஒரு வழக்கிற்காக மட்டும் மக்கள் வரிப்பணம் சுமார் 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிறப்பு நீதிமன்றம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி பல்வேறு காரணங்களை விதவிதமாக சொல்லி இந்த வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி தடுத்து நிறுத்திட பெரும் முயற்சி எடுக்கப்பட்டது.
இந்த வழக்கிற்காக இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் ஆஜரானார்கள். ஆனால் இதை எல்லாம் முறியடித்து இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவித்த பிறகும் கூட விடுதலைப் புலிகளாலும், காவிரி நதி பிரச்சினையாலும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி, வேறு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் அந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு தேதியையே ஒருவார காலம் தள்ளி வைத்து, ஜெயலலிதா கேட்ட நீதிமன்றத்திற்கே வழக்கை மாற்றியது.
மேலும் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு இல்லை என்று தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், காவல்துறையை தலைமை தாங்கும் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்பதை நம்பமுடியவில்லை என்று அவர் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்று தீர்ப்பு வழங்குவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மேயர்கள், நகராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிமுகவின் நிர்வாகிகள் என அனைவரும் ஒட்டு மொத்தமாக பெங்களுரில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது.
இதுபோன்ற நிகழ்வுகள் வரவேற்கத்தக்கதல்ல. பெங்களுரில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேறுவழியின்றி காவல்துறையினர் தடிஅடி நடத்தியுள்ளனர். கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என்றும் நான்கு ஆண்டு சிறை தண்டனையோடு, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அதிமுகவினர் அராஜகத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைகள், தொழில் நிறுவனங்களை மூடச்சொல்லி அடித்து நொறுக்குவதும், பஸ்களை தீ வைத்து எரிப்பதும், சாலைகளில் செல்கின்ற பஸ், லாரி, கார் போன்ற வாகனங்களை கல்வீசி தாக்குவதும், சாலை மறியல் செய்வதும் என வன்முறையில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த சம்பவங்கள் நடைபெறும் பொழுது காவல்துறையினர், கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். ஆளும் கட்சியினரே வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளதால் மத்திய அரசின் பாதுகாப்பு படையின் மூலம் தமிழகத்திற்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழக காவல்துறை இதுபோன்ற வன்முறை சம்பவங்களை, இரும்புக்கரம் கொண்டு அடக்கி தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது தரப்பட்டுள்ள இந்த தீர்ப்பு தவறு செய்பவர்களுக்கு பாடமாக இருக்கும். ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கிறது என ஆட்டம் போடும் ஆட்சியாளர்கள் இதை பார்த்த பிறகாவது திருத்திட வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்காக ஆட்சி செய்யவேண்டும் மாறாக லஞ்சம், ஊழல், முறைகேடு, அராஜகம் என செய்து ஆட்சி நடத்தினால் தண்டனை நிச்சயம் என்பதை இத்தீர்ப்பு நிரூபித்துள்ளது.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVho2.html
பதவியில் இருக்கும் போதே தண்டிக்கப்பட்ட முதல் முதலமைச்சர் ஜெயலலிதா!
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 03:34.03 PM GMT ]
66 வயதான ஜெயலலிதாவுக்கு பெங்களுர் நீதிமன்றம் இன்று சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.
1991- 96ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் சேகரித்த சொத்துக்கள் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த வருடம் உச்சநீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி குற்றவாளியாக அறிவிக்கப்படும் ஒரு அரசியல்வாதிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் தடைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த தீர்ப்புக்கு எதிராக குறித்த தண்டனை வழங்கப்பட்டவரின் சார்பில் மூன்று மாதங்களுக்குள் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதன் அடிப்படையிலேயே பெங்களுர் நீதிமன்றம் இன்றைய தீர்ப்பை அறிவித்துள்ளது.
இதேவேளை ஜெயலலிதா தமக்கு அடுத்ததாக முதல்வர் ஒருவரை தெரிந்தெடுப்பார் என்றும், தமக்கு எதிரான நான்கு வருட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVho4.html
Geen opmerkingen:
Een reactie posten