ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்ட நகரம் ஒன்றில் 35 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி பல நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றியுள்ளனர்.
ரக்கா (Raqqa) நகரை தலைமையமாக கொண்ட இவர்கள் மொசூல் (Mosul) நகரை கைப்பற்றி அங்கிருக்கும் கிரிஸ்தவர்கள், யாஸிதி இன மக்களை கொன்று குவித்துள்ளனர்.
இந்நிலையில் தலைநகர் பாக்தாத்தின் (Bagdad) வடக்கு பகுதியில் உள்ள சுலைமான் பெக் (Sulaiman Bek) என்ற நகரின் நுழைவாயிலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 35 சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இந்த சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிர்குக்(Kirkuk) நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
|
Geen opmerkingen:
Een reactie posten