[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 07:26.41 AM GMT ]
இதன் காரணமாக இறப்பர் செய்கையின் மூலம் வாழ்க்கை நடத்தி வரும் இலங்கையின் மிகவும் வறிய மாவட்டமான மொனராகலை மாவட்ட மக்கள் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்துள்ளனர்.
அதிகளவில் இறப்பர் செய்கையிலும் ஈடுபடுவோர் கேகாலை மாவட்டத்தில் உள்ளனர். அந்த மாவட்டத்தில் 41 ஆயிரம் ஹெக்டேயரில் இறப்பர் செய்கை பண்ணப்பட்டுள்ளது.
அந்த மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் மக்கள் இறப்பர் தொழிலை நம்பி வாழ்கின்றனர். 75 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரே வாழ்வாதாரமாக இறப்பர் தொழில் இருந்து வருகிறது எனவும் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் கேகாலை மாவட்டத்தை சேர்ந்த இறப்பர் தோட்ட உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhx4.html
உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு விசேட சலுகை: பிரதமர் மோடி
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 07:40.14 AM GMT ]
வெளிநாடு வாழ் இந்தியர்களை ஒன்றாக கருதுவதன் மூலம் இவர்கள் இந்தியாவிற்கு வந்து செல்ல எளிதாகலாம்.
இது வரை PIO என்ற அட்டை வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்பட்டுவந்தது. பாகிஸ்தான்,பங்களாதேஸ், ஆப்பானிஸ்தான், நேபாளம் சீனா மற்றும் இலங்கை நீங்களாக இதர வெளிநாடுகளில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினருக்கு இந்த அட்டை வழங்கப்படும்.
இவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு விசா பெறவேண்டும் வீசா வழங்கப்பட்ட காலத்திற்கே இந்தியாவில் தங்கமுடியும். அவர்கள் என்ன நோக்கத்திற்கு விசா பெற்றார்களோ அதை தவிர வேறு நடவடிக்கைகளில் ஈடுப்படமுடியாது.
ஆறு மாத காலத்திற்கு ஒருமுறை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தங்களது அறிக்கையை பதிவு செய்யவேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhx5.html
புலனாய்வாளர்களது அச்சுறுத்தலால் சாட்சியமளிக்க அச்சப்படும் மக்கள்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 07:54.40 AM GMT ]
இதனால் சாட்சியமளிக்க வந்தவர்கள் மிகவும் அச்சத்துடனேயே சாட்சியம் அளித்து வருகின்றனர். 3ஆவது நாளாக இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் சாட்சியப் பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே முழங்காவில் மத்திய கல்லூரியில் சாட்சியப்பதிவு நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற்றது. இதன்போது சாட்சியத்திற்கு ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டு சாட்சயமளிக்கப்பட்ட 2பேர், புதிய பதிவு மேற்கொண்ட ஒருவர் மற்றும் அழைக்கப்படாத 4 பேருமாக 7 பேர் இராணுவத்தினரால் சாட்சியப்பதிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,
முழங்காவிலில் சாட்சியமளித்தவர்களது வீட்டிற்கு இன்று காலை சென்ற இராணுவ சீருடை மற்றும் சிவில் உடையில் சென்ற இராணுவத்தினர் பூநகரி பிரதேச செயலகத்தில் காணாமல் போனவர்களது பதிவுகள் நடைபெறுவதாக தெரிவித்து அங்கு செல்லுமாறு தெரிவித்தனர்.
எனினும் தாங்கள் முழங்காவில் சாட்சியம் அளித்து விட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் இல்லை இது புதிய பதிவுகள் என்று கூறினர். எனவே பிள்ளைகளைக் காணாது தவிக்கும் பெற்றோர் எப்படியாவது தங்களது பிள்ளைகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் இன்றும் வருகை தந்துள்ளனர்.
அவர்கள் இது பற்றித் தெரிவிக்கும் போது,
"முந்தநாள் தான் முழங்காவிலில் ஆணைக்குழு முன்னுக்கு சாட்சி சொன்னம். ஆனால் இண்டைக்கு காலையில் வீட்டிற்கு வந்த ஆமி புதுப்பதிவு ஒண்டு பூநகரி போங்கோ என சொல்லிச்சினம். ஆனால் நாங்கள் சொன்னம் முந்தநாள் போயிட்டம் ரண்டும் ஒன்று தான் எண்டு சொன்னம் ஆனால் அது புதுப்பதிவு போங்கோ எண்டிச்சினம் வந்தம். இங்ச வந்து கேட்டா முதலே பதிஞ்சாச்சு இனி பதியேலாது. நீங்கள் வீட்டுக்கு போங்கோ பதில் அனுப்புவம் எண்டு சொல்லி திருப்பி விட்டிட்டினம். காசுகளும் இல்லை. வந்து அலையுறம் என சினத்துடன் தெரிவித்தனர்.
இதேவேளை, இராணுவம் பஸ் ஒழுங்கு செய்து குறிப்பிட்டவர்களை ஏற்றிக் கொண்டு வந்துள்ளதுடன் சிலர் தங்களுடைய பணத்தை கொடுத்தும் வந்திருந்தனர். மேலும் பிரதேச செயலக வளாகத்திலும் வெளியிலும் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தேசிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சீருடை தரித்த இராணுவத்தினரும் சூழ்ந்துள்ளனர்.
எனவே சாட்சியமளிக்க வந்தவர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் முழுமையாக பதிலளிக்க அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வெளியில் நின்ற சீருடை அணிந்த இராணுவத்தினரிடம் சென்ற ஆணைக்குழுவின் அதிகாரி அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த இடத்தை விட்டு இராணுவத்தினர் சென்று விட்டனர்.
எனினும் சிவில் உடையில் வளாகத்திற்குள் நின்ற புலனாய்வாளர்கள் சாட்சியமளிக்க வந்தவர்களையும் புகைப்படம் எடுப்பதில் முனைப்புடன் இருந்தனர். இது குறித்தும் ஆணையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்களது நடவடிக்கையும் நிறுத்தப்பட்டதுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்கள் மற்றும் புகைப்படம் எடுப்பவர்களையும் அகன்று செல்லுமாறு பணித்ததுடன் ஆணைக்குழுவினர் கண்காணிப்புடனும் உள்ளனர்.
இருப்பினும் சிலரின் நடமாட்டம் இன்னும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhx6.html
Geen opmerkingen:
Een reactie posten