தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

கட்டானையில் தமிழ் பெண் வர்த்தகர் வெட்டிக்கொலை (செய்தித் துளிகள்)!

சீன நீர் மூழ்கி கப்பலின் வருகை குறித்து கவனம் செலுத்தும் இந்தியா
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 07:02.31 AM GMT ]
சீனாவின் பாதுகாப்பு தரப்பினருக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு வந்தமை குறித்து இந்தியா விசேட கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனா தனது கடற்படை பயிற்சிகளை அதிகரித்து இருப்பது குறித்தும் இந்தியா தனது அவதானத்தை செலுத்தி வருகிறது.
சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது சீனாவின் சோங்க் க்ளாஸ் என்ற நீர்மூழ்கி கப்பல் கொழும்புக்கு வந்தது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்தியாவின் இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு பொறுப்பான கடற்படை கட்டளை தளபதி அத்மிரல் ரொபின் தோவான், இந்து சமுத்திரத்தில் சீனாவின் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhx2.html

கட்டானையில் தமிழ் பெண் வர்த்தகர் வெட்டிக்கொலை (செய்தித் துளிகள்)
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 07:02.33 AM GMT ]
கட்டான, கோல்டன் கேட் பிரதேசத்தில் தனிமையில் வசித்து வந்த செல்வந்தவரான தமிழ் பெண் வர்த்தகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோல்டன் கேட் பிரதேசத்தில் உள்ள இரண்டு மாடி வீட்டில் தனியாக வசித்து வந்த 45 வயதான தீபா என அழைக்கப்படும் ஞானமணி நாடார் என்ற பெண் வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பல நாட்களுக்கு பின்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் அவது பழுதடைந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்மணி வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயல் வீட்டினர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கட்டான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியாவில் மினி சூறாவளி
நுவரெலியா, பொரலந்த வஜிரபுர பகுதியில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக 5 குடும்பங்கள் இடம்பெயா்ந்துள்ளன. இவா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜீ குமாரசிரி தெரிவிக்கின்றார்.
இந்த மினி சூறாவளியினால் பாரியளவிலான பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 
கொழும்பில் பாதாள உலகத்தலைவர் சுட்டுக் கொலை
கொழும்பின் பிரபல பாதாள உலகத் தலைவரான களு சூட்டி என்பவர் நேற்றிரவு பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஹிரான் தர்சன குணவர்த்தன என்ற இந்த நபர் மிரிஹான விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு கறுவாத்தோட்டப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காட்டுவதற்காக அழைத்து செல்லப்பட்ட வேளையில் தப்பியோட முயற்சித்த நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வெல்லம்பிட்டி பிரதேசத்தை தனது அச்சுறுத்தல் மூலம் ஆட்டிப்படைத்து வந்ததுடன், கொழும்பின் போதைப் பொருள் வர்த்தகம், கப்பம் பெறும் நடவடிக்கைகளிலும் இவருக்குத் தொடர்பிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொலன்னாவை பிரதேசத்தில் பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவின் கீழ் இயங்கி வந்த போதைப் பொருள் வர்த்தகர்கள் அண்மையில் இரண்டு அணிகளாக பிளவுபட்டிருந்தனர்.
இதில் ஒரு அணியினர் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான இரகசியங்களை வெளியிடத் தொடங்கியிருந்தனர். இதன் பிரதிபலிப்பாக சமீப நாட்களில் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் கோட்டாபயவின் பெயரும் அடிபடத் தொடங்கியிருந்தது.
அதன் காரணமாக அவர்களை அழித்தொழிக்குமாறு மேல்மட்டத்திலிருந்து பொலிசாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் பலர் வேட்டையாடப்பட்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாகவே களு சூட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் சிங்கள ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhx3.html

Geen opmerkingen:

Een reactie posten