[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 09:58.15 AM GMT ]
நாட்டின் 43 வது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்ற தெரிவுக்குழு வழங்கிய தீர்ப்பை, இரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நேர்மையான நீதியரசர் ஒருவர் பதவி உயர்வு வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
அனில் குணரத்ன என்ற இந்த நீதியரசருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
வழக்கின் தரம், நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் நீதிபதிகள் இவ்வாறே உபசரிக்கப்படுகின்றனர்.
ஷிராணி பண்டாரநாயக்கவின் வழக்கில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்ப்பை இரத்துச் செய்த மற்றுமொரு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரான ஸ்ரீஸ்கந்தராஜா வெறுப்படைந்த நபராக இறந்து போனார் எனவும் உபுல் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு புதுக்கடையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய கேட்போர் கூடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அகதிகள் தொடர்பான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை நாடு கடத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
அகதிகளை நாடு கடத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் காரணமாக அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என மனுவை தாக்கல் செய்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் விசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருக்கும் நபர்களை நாடு கடத்தும் உரிமை அரசாங்கத்திற்கு இருப்பதாக அரசாங்கத்தின் சார்பில் ஆஜராக சட்டத்தரணி கூறியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான சாசனத்தில் இலங்கை கையெழுத்திடவில்லை என்பதால், அகதிகள் தொடர்பான பொறுப்பு இலங்கை அரசுக்கு இல்லை எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழு விசாரிக்க கூடிய வகையில் விடயங்கள் இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgo5.html
அரசாங்கத்தில் இருந்து ஐ.தே.கட்சிக்கு தாவப்போகும் 25 அமைச்சர்கள்?
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 10:06.57 AM GMT ]
ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சியில் இணையும் முதல் நடவடிக்கையாக இது இருக்கும் எனவும் மேலும் சுமார் 25 அமைச்சர்கள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அந்த தகவல்கள் கூறின.
இவர்கள் ராஜபக்ஷவினருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை மாத்தளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹார,அரசாங்கத்தை சேர்ந்த 5 முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக கூறியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டு வரும் ஐக்கியம் காரணமாக இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடியதாகவும் அலுவிஹார குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அவர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgo6.html
ஜெயலலிதாவின் சிறைத்தண்டனை ஈழத்தமிழர் போராட்டங்களுக்குத் தடையில்லை! மனோ கணேசன் - இலங்கை ஊடகங்களின் பார்வையில் ஜெயலலிதா
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 10:34.38 AM GMT ]
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரான மனோ கணேசன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் போராட்டங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆதரவு தெரிவித்த ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டும்தான் என்றில்லை. பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
அவர் சிறைத் தண்டனை பெற்றுவிட்டதற்காக இங்குள்ளவர்களின் போராட்டங்கள் தடைப்படாது. ஏனெனில் நாங்கள் ஒருபோதும் தமிழ்நாட்டின் ஆதரவை மட்டும் நம்பி போராட்டங்களை முன்னெடுத்ததில்லை.
எனவே அவரது சிறைத்தண்டனை குறித்து எதுவித கருத்தும் வெளியிட விரும்பவில்லை. அதே நேரம் எங்களது போராட்டங்கள் வழமை போன்று தொடரும் என வலியுறுத்திக்கொள்கின்றேன் என்றும் மனோ கணேசன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் சிறைத்தண்டனை! கழுவி ஊற்றும் சிங்கள ஊடகங்கள்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதா மீதான சிறைத்தண்டனை குறித்து அரச ஆதரவு ஊடகங்கள் ஏட்டிக்குப் போட்டியாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
உலகத்திலேயே ஜெயலலிதா ஒருவர்தான் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து, சிறைத்தண்டனை பெற்றவர் என்பது போல அவற்றின் செய்திகள் அமைந்துள்ளன.
மேலும் ஜெயலலிதாவின் சிறைத் தண்டனை மூலம் ஈழத் தமிழர்களுக்கான இந்திய ஆதரவு மங்கிவிடும் என்பதையும் அந்த செய்திகளில் மறக்காமல் சுட்டிக்காட்டுகின்றனர். அதன் மூலம் இனிவரும் காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டங்களும் மழுங்கி விடும் என்ற எதிர்பார்ப்பு சிங்கள ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது.
அரசாங்க வானொலியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஜெயலலிதாவை சர்ச்சைக்குரிய அரசியல்வாதி என்று வர்ணித்திருந்தது.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் மக்களின் வரிப்பணத்தை கொள்ளைடியத்த அரசியல்வாதியாக ஜெயலலிதாவை சித்தரித்திருந்தது.
லக்பிம பத்திரிகை இன்னொரு இமெல்டா மார்க்கோசாக ஜெயலலிதாவை வர்ணித்திருந்தது.
அமைச்சர் விமல் வீரவங்சவின் செய்தி ஊடகங்களில் ஜெயலலிதா அதிகார துஷ்பிரயோகம் செய்து சொத்துக்குவித்தவராக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறாக அரச ஆதரவு ஊடகங்கள் எல்லாம் ஜெயலலிதா தொடர்பான செய்திகளை வெளியிட்டு, அவருக்கு சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அதே நேரம் தமிழ் மக்களின் போராட்டம் ஒட்டுமொத்தமாக அடக்கப்பட்டுவிட்டது போன்ற ஒரு மாயையும் மறக்காமல் தமது செய்திகளில் திணித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgpy.html
Geen opmerkingen:
Een reactie posten