[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 06:36.11 AM GMT ]
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலயத்தில் 4ம் வகுப்பில் கல்வி கற்கும் 9 வயதுடைய செல்வராசா வரதன் என்ற மாணவன் அங்கு கற்பிக்கும் ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கண்டித்தும் குறித்த அசிரியரைக் கைது செய்து விசாரணை செய்யுமாறும் மற்றும் ஆசிரியரை இடம்மாற்றம் செய்யக் கோரியும் இன்று காலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாடசாலைக்கு முன்பாக ஆற்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆசிரியர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஜெயந்தியாய கிச்சிரா வித்தியாலயத்தில் கல்வி கற்பித்தபோது அங்கு கல்விகற்கும் மாணவி ஒருவரை தாக்கியதற்காக தற்போது மாகாண மட்ட விசாரணை, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெறுவதாகவும் இதன் நிமித்தமாக ஆசிரியர் இடமாற்றம் பெற்று தற்போது குறித்த பாடசாலையில் கடமையை பொறுப்பெடுத்ததாகவும் பாடசாலை அதிபர் பரமானந்தராஜா தெரிவித்தார்.
குறித்த மாணவன் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாகவும் இவருக்கான விசாரணை ஆரம்பிக்கப்படும் எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
மாணவன் தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணை செய்யுமாறு யோகேஸ்வரன் எம்பி வலியுறுத்து
வாழைச்சேனை மயிலங்கரச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன், ஆசிரியரால் தாக்கப்பட்டமை தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கல்குடா கல்வி வலயதுக்குட்பட்ட வாழைச்சேனை மயிலங்கரச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் செல்வராஜா வரதன் (வயது 09) என்னும் 4ம் ஆண்டு கல்வி கற்பவன்.
கடந்த 2014.09.23ம் திகதி அன்று பாடசாலையில் வைத்து அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஜனாப்.என்.எம்.நசீர் என்பவரால் தாக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதி சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிகின்றேன்.
இத்தாக்குதலை மேற்கொண்ட ஆசிரியர் சார்பாக நியாயமான நடவடிக்கைகள் நடைபெற்றதாக தகவல் கிடைக்கவில்லை.
எனவே உரிய முறையில் விசாரணையை மேற்கொண்டு இச் சிறுவனுக்கு துன்பம் விளைவித்த இவ்ஆசிரியர் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வருமாறு வேண்டுகின்றேன். தங்கள் நடவடிக்கை சார்பாக பதிலை எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் வாழைச்சேனை கல்குடா வலய வலயக் கல்விப் பணிப்பாளர், வாழைச்சேனை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி, வாழைச்சேனை பொலிஸ் நிலையம் பொலிஸ் பொறுப்பதிகாரி, மட்டக்களப்பு மாவட்ட டி.ஐ.ஜி, வாழைச்சேனை ஏ.எஸ்.பி. ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgt1.html
பௌத்தர்களின் புனித சின்னங்களில் ஒன்றான தர்ம சக்கரம் பொறித்த காலணிகளை விற்பனை செய்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மசக்கரம் பொறித்த காலணிகள் விற்பனை செய்தவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 06:57.14 AM GMT ]
பலாங்கொடை நகரத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் தெஹிகஸ்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொடை நகர மத்தியில் அமைந்துள்ள பஸ் நிலையத்தின் மேல்மாடியில் சந்தேக நபர் விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்துள்ளார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த காலணிகள் சிலவற்றில் தர்ம சக்கரம் பொறிக்கப்பட்டிருப்பது குறித்து பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று பலாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgt2.html
இலங்கை பல்லினங்கள் வாழும் நாடு என்ற கொள்கையை தூக்கி எறிந்து பௌத்தர்களுக்கு மாத்திரமே சொந்தம் என்று ஏற்றுக்கொண்டு இலங்கை என்ற பெயரை மாற்றி ”சிங்ஹலே” என்ற பெயர் மாற்றம் செய்யப்படல் வேண்டும். இவ்வாறு பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே கூறியுள்ளார்.
பலாங்கொடை நகர மத்தியில் அமைந்துள்ள பஸ் நிலையத்தின் மேல்மாடியில் சந்தேக நபர் விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்துள்ளார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த காலணிகள் சிலவற்றில் தர்ம சக்கரம் பொறிக்கப்பட்டிருப்பது குறித்து பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று பலாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgt2.html
ஸ்ரீலங்கா என்ற பெயர் சிங்ஹலே என மாறுமா?- பொதுபல சேனாவின் புதிய தீர்மானம்: சிறுபான்மை இனங்கள் எதிர்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 07:07.28 AM GMT ]
கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் சங்க சம்மேளனத்தின் மகாநாட்டின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுகளின் மதங்களையும், உதவிகளையும் தடை செய்ய வேண்டும்.
அரசியல்வாதிகளின் சுய நலங்களுக்காக பல மதத்தவர்கள் வாழும் நாடு என்றும் பலவித அமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர். இந்த மாயை தடுக்கப்படல் வேண்டும்.
சிங்கள பௌத்த நாடு என்றும் இங்கு ஒரே இனம், ஒரே சட்டம் என்ற கொள்கை அமுல்படுத்த வேண்டும் இராஜ்யத்தின் மதத் தலைவராக சங்கராஜ மகா நாயகரை நியமித்து அவர் தலைமையில் 50 பேர் அடங்கிய பௌத்த குருமார் குழுவை நியமிக்க வேண்டும்.
இந்த குழுவே அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவாக நியமிக்கப்படல் வேண்டும். இவ்வாறு வலியுறுத்தும் தீர்மானங்களை பொதுபல சேனா தனது மகா நாட்டில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.
பொதுபல சேனாவின் புதிய தீர்மானம்- சிறுபான்மை இனங்கள் எதிர்ப்பு
இலங்கையர் அனைவரும் தம்மை சிங்களவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென பொதுபல சேனா நிறைவேற்றியுள்ள தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இலங்கையின் கடும்போக்குவாத பௌத்த அமைப்பான பொதுபல சேனா அண்மையில் கொழும்பில் பிக்குமார் மாநாடொன்றை கூட்டியிருந்தது.
நாட்டின் நாலாபக்கங்களில் இருந்தும் பிக்குமார் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் ஞானசார தேரர்,
இலங்கையர் அனைவரும் தம்மை சிங்களவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கடும் குரலில் வலியுறுத்தியுள்ளார்.
இனிவரும் காலங்களில் தமிழர்கள்,கிறித்தவர்கள், முஸ்லிம்கள் என்ற அடையாளம் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள அவர் , அதற்குப் பதிலாக சிங்கள கிறித்தவர், சிங்கள இந்து, சிங்கள முஸ்லிம் என்பதாக அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தற்போது சிறுபான்மை இன மக்களின் தலைவர்களின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, எந்தவொரு இனமும் தங்கள் அடையாளத்தை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
பொது பல சேனாவின் மாநாடு அரச ஆதரவுடன் நடைபெற்ற தீவிரவாதிகளின் மாநாடு என்றும் அவர் சாடியுள்ளார்.
கிறித்தவ சகவாழ்வு மன்றத்தின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து பிள்ளை சக்திவேல் பொது பல சேனாவை மதத் தீவிரவாதிகள் என்று வர்ணித்துள்ளார்.
இலங்கையில் வாழும் ஏனைய இனங்களின் கலாசார , தனித்துவங்களை அழிப்பதற்காகவே பொது பல சேனா உருவாக்கப்பட்டுள்ளது.
அவர்களின் இந்தத் தீர்மானம் அரசின் தீர்மானமாகவே பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் அரச ஆதரவுடன்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து பொது பல சேனாவை தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எதிராகவும் கடுமையான வார்த்தைகளைக் கொட்டியிருந்தார்.
இது தொடர்பில் இதுவரை யாரும் கருத்துக்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgt3.html

Geen opmerkingen:
Een reactie posten