[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 11:49.03 AM GMT ]
இந்த கட்டுரையின் நோக்கம் தமிழ் தலைமைகள் அனுபவசாலிகளாக இருந்தாலும் ஆளுமையுடையவர்களாக செயற்பட்டாலும், நாம் கூறும் காரணிகளை சற்று கவனிக்கப்பட வேண்டும், என்பதோடு அதன் மூலம் தமிழினம் ஒற்றுமையுடன் உயர வேண்டும் என்பதே ஆகும்.
இலங்கை மக்களின் மன மாற்றம் அரசுக்கு ஏமாற்றமாகிய நிலையில், அரசியல் வட்டாரங்களில் தொடரப்போகும் பல மாற்றங்களை நாம் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாத காலத்தில் பார்க்கலாம்.
இந்த மாறுப்பட்ட எண்ணங்களால் அரசுடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகளுக்கு மாத்திரம் அடக்காமல் அரசில் அமைச்சர்களாக இருக்கும் ஆளும் கட்சி அரசியல் வாதிகளின் மனதிலும் புகுந்து விளையாடும்.
இந்த மன மாற்றம் அரசுக்குள் பாரதூரமான பல விளைவுகளை எதிர்வரும் மாதங்களில் ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஊவா வில் அரசு மாகாண ஆட்சியை அமைத்ததை பெருமையாக நினைக்க முடியாத விளைவுகளும் ஏற்படுவற்கான சாத்தியக் கூறுகள் இப்போது உருவாகிக் கொண்டு இருக்கின்றது.
அதற்கான காய் நகர்த்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆகவே ஊவா மாகாண சபை தொடர்ந்தும் தற்போதைய அரசின் கையில் தொடரருமா? அல்லது கைமாறுமா?என்பதை நாம் வெகுவிரைவில் காணக்கூடியதாக இருக்கும்.
தேர்தல் நோய் தற்போது இலங்கையை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கின்றது. அதில் அனைவரும் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதன் தாக்கம் ஜனாதிபதி தேர்தல் முதலில் வருமா அல்லது பாராளுமன்ற தேர்தல் முதலில் வருமா என்பது முக்கிய விடயமாகிவிட்டது.
ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெற்றால் ஆளும் அரசுக்கு சாதகமான நிலை வரலாம். ஏனென்றால் ஜனாதிபதியின் அதிகார பலம் சகோதர அதிகாரங்கள், படைபலம் அடிப்படைவாதிகளின் தொடர்பு என்றெல்லாம் பல பலமும் நவீன பிரசாரங்களும் இவருக்கு உதவலாம்.
அத்தோடு சிங்கள மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கை பெற்றவராகவே மகிந்த ராஜபக்க்ஷ இருக்கின்றார். இதை எதிர்கட்சிகளால் செய்யமுடியாமல் போகலாம்.
அதேபோல் அரசால் வழங்கப்படும் பரிசு பொதிகளை எதிர்க்கட்சிகளால் வழங்க முடியாது போகலாம். ஆகவே தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற பல நவீன உபாயங்களை பின்பற்ற வேண்டிய நிலையும் வரலாம்.
சிறுபான்மை மக்களின் தீர்க்கமான முடிவுகள் நிச்சயம் ஜனாதிபதி தேர்தலில் முக்கியதுவம் பெறப்போகின்றது. இது அரசுக்கு இப்பொழுது புரிய வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,கிழக்கு மாகாண சபை அரசுடன் கட்டுப்பாட்டில் தொடருமா? அல்லது கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியாக மாறிவிடுமா? என்பது போல் ஊவாவிலும் மாற்றம் வருவதற்கான சில முன்னெடுப்புக்களை தற்போழுது ஊவா மாகாணத்தில் பாராளுமன்ற பிரதிநிதியாக இருக்கம் ஒருவர் மூலம் இரகசிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசுடன் இணைந்து செயற்பட்டு கொண்டிருக்கும் பிரபல மலையக அரசியல் கட்சிகளுடன் தற்போது எதிரக்கட்சி பாராளுமன்ற பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் இரகசிய பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாக சில செய்திகள் கசியத் தொடங்கிவிட்டது.
ஐ.தே.க 13 ஆசனங்களையும் ஜேவிபி 2 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19 ஆசனங்களுடன் இருக்கின்றது. இதில் சிறுபான்மை தமிழ் உறுப்பினர்கள் நால்வர் இருக்கின்றார்கள் அதில் இ.தொ.கா விற்கு மூன்று உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் பங்கு அரசுக்கு மிகமிக அவசியம்.
இப்பொழுது ஊவா மாகாணத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைகளை மாகாண அரசு புறக்கணிக்க முடியாத கட்டாயத்தில் இருக்கப் போகின்றது. அப்பொழுது இந்த சிறுபான்மை அங்கத்தவர்களின் பங்கு முக்கியபடப் போகிறது.
அதேவேளை நாட்டில் மக்களோ மாற்றத்தை நேசிக்க தொடங்கிவிட்டார்கள் இந்நிலையில் சிறுபான்மை மலையக கட்சிகளின் தலைமைத்துவமும் அடுத்த ஜனாதிபதி தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ எதுவானாலும் இவர்கள் தொடர்ந்து பதவிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிக் கொண்டு இருக்கின்றது.
அதே நேரம் ம.ம.முன்னணி, இ.தொ.காவில் போட்டியிட்டு வென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான வே.இராதாகிருஷ்ணன், பி.இராஜதுரை போன்றவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட ஐ.தே.காவை நாடலாம் என்ற யூகமும் தென்படுகின்றது.
தற்போது இ.தொ.கா ஆளும்கட்சிகளில் இருந்தாலும் எதிர்க்கட்சியான ஐ.தே.க வின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், மலையக கூட்டு ஒப்பந்த விடயங்களில் ஒன்றுபட்டு செயல்படுத்துவது போல் மிக நெருக்கமான நல்லுறவுகளை தொடர்ந்து பேணி வருகின்றனர்.
இதனால் இந்த இரு சங்கங்களை சேர்ந்த அரசியல்வாதிகளும் ஒண்றிணைந்து செயல்பட வாய்ப்புக்கள் தென்படலாம். இதற்கு வர்த்தக சமூகமும் முழு ஒத்துழைப்பு கொடுக்கலாம். இதற்கு ஐ.தே க பாராளுமன்ற உறுப்பினர் கே.வேலாயுதம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
இது ஐ.தே.க, இதொ.கா, இ.தே.தோ.தொ சங்கம் ஆகியவற்றிற்கு மாபெரும் இலாபமாகலாம் தொழிலாளர் தேசிய சங்கம் மலையக மக்கள் முன்னணிக்கு பெரும் நட்டமாகலாம்.
இது மலையகத்தில் நடைபெறப்போவது 1983க்கு முன் இ.தொ.கா, ஜே.ஆர் உறவை நினைவுபடுத்தும். ஆனால் திகா, ராஜதுரை, ராதாவின் எதிர்கால அரசியலுக்கு பாதிப்பாகலாம்.
இப்போது நாம் வரவு செலவு திட்டத்திற்கு நமது கவனத்தை சற்று பார்த்தால் இன்று அரசுடன் இருக்கும் மு.கா, இ.தொ.கா, ம.ம.மு, தே.தொ.ச ஆகியவை ஏதோ ஒரு காரணத்தில் வெளியேறப் போகின்றது.
அதேபோல் அரசியல் இருக்கும் ஐ.தே.க குழு, ஆளும் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை தனது சுயநலத்துடன் அரசை விட்டு வெளியேரலாம்.
இது ஜனாதிபதி தேர்தல் முதலாவதாக நடைபெற்றால் இவர்களின் செயல்கள் தோல்வியில் முடியும், ஆனால் இவர்களின் எதிர்பார்ப்பு வரவு செலவு திட்டத்தை தோற்கடித்தால் மாத்திரமே இதை நிறைவேற்றக்கூடிய சாத்தியங்கள் வர வாய்ப்புள்ளது.
எனவே வரும் மாதங்களில் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெற்றால், மஹிந்த ஆட்சி. வரவு- செலவு திட்டம் தோல்வி ஏற்பட்டால் பாராளுமன்ற தேர்தல் என மாறுபடக்கூடும்.
இந்த நிலையில் இலங்கை அரசு மாபெரும் சோதனையை சந்திக்கப்போவது உறுதி. எனவே வரும் மாதங்கள் அரசுக்கு சவாலா? அரசியல் தலைமைகளுக்கு சவாலா? அல்லது பொது மக்களுக்கு சவாலா? எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றது சர்வதேச சமூகம்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVht4.html
கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்கு பதிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 11:51.13 AM GMT ]
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியானதையடுத்து, திமுக-அதிமுக தொண்டர்கள் பரஸ்பரத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை பொலிஸ் நிலையத்தில் இவர்கள் இருவர் மற்றும் பல திமுக-வினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கருணாநிதி இல்லம் உள்ள கோபாலபுரம் அருகே பயங்கர ஆயுதங்களால் தங்களைத் தாக்கியதாக அதிமுக-வினர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த மனு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திமுக மற்றும் அதன் தலைவர்கள் வீடுகளுக்கு அருகில் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதினால் திமுகவினருக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVht5.html
பௌத்தர்களைப் பாதுகாக்கவும்! கடைசித் தருணம் இதுவென விராது தேரர் எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 12:48.07 PM GMT ]
முஸ்லிம் அடிப்படை வாதம் பௌத்தத்தை அழிக்கின்றது. பௌத்தர்களைப் பாதுகாக்காது போனால், அவர்களின் கடைசித் தருணம் இதுவாகும் என மியன்மாரின் சர்ச்சைக்குரிய அசின் விராது தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு சுகததாச விளையாட்டு உள்ளகரங்கில் நடைபெற்றுவரும் பொதுபல சேனாவின் இன்றைய பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது விசாவை இரத்து செய்வதற்கு இலங்கை முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளுக்கும் மத்தியில், இந்நாட்டுக்கு வருகைதர விசாவை வழங்கிய இந்நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பௌத்தர்கள் இன்று உலகில் மிகப் பயங்கரமான ஒரு நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். பௌத்தர்களுடைய அகிம்சைப் போக்கை ஒரு பலஹீனமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை மதம் மாற்றுதல், பௌத்த விகாரைகளை அழித்தொழித்தல், மகா சங்கத்தினரை அபகீர்த்திக்கு உள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளில் ஜிஹாத் பயங்கரவாதம் செயற்பட்டு வருகின்றது.
ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு உலக ஊடகங்கள் அமைதியன ஒரு போக்கைக் கைக்கொண்டு வருகின்றன.
ஊடகங்களையும், பொருளாதாரத்தையும், தொழில்நுட்பத்தையும் கையில் ஏந்திய உலக சக்திகள் பௌத்தர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன.
ஜிஹாத்வாதிகளினால் உலக பௌத்த கருத்துக்களுக்கு தவறான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அடிப்படைவாத கொலைகாரர்களை நிரபராதிகளாகவும், அகிம்சை வழியில் செல்லும் பௌத்தர்களை குற்றவாளிகளாகவும் புடம்போட்டுக்காட்ட இந்த அடிப்படைவாதிகள் முயற்சிக்கின்றனர்.
இந்த அனைத்துக்கும் பின்னால் ஜிஹாத்வாதிகளும் அவர்களின் பின்னால் உள்ள ஊடகங்களும்தான் இருக்கின்றன.
சர்வதேச ரீதியில் பார்க்கும் போது பௌத்தர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர். இந்த சிறு தொகையினரை நாம் பாதுகாக்கத் தவறினால், இது பௌத்தர்களின் கடைசித் தருணம் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.
எமது பௌத்த குடும்பங்கள் முக்கிய அங்கமாகும். அதனை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தக் காரியங்களை நிறைவேற்றுவதற்கும் உலக பௌத்தர்களின் பாதுகாப்புக்காகவும் இலங்கையில் செயற்படும் பொதுபல சேனாவுடன் எனது 969 எனும் அமைப்பு கைகோர்த்து செயற்பட்டு வருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இறுதியாக நாட்டைக் கட்டியெழுப்பும் மகாசங்க ஒன்றுகூடலில் கலந்து கொள்வதற்கு எனக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா அமைப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன், இந்த உலகம் பௌத்த அகிம்சைவாதிகளின் அதிகாரத்தின் கீழ் சமாதான உலகமாக மாறட்டும் என பிராத்திக்கின்றேன் எனவும் அசின் விராது தேரர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVht7.html
Geen opmerkingen:
Een reactie posten