தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

ஜெயலலிதா அம்மையாருக்கு ஈழத்தமிழர் எழுதும் கடிதம்

சஜின் வாஸ் தாக்குதல்! பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் ராஜினாமா
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 05:10.35 AM GMT ]
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸின் தாக்குதலுக்குள்ளான பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் ஜனாதிபதியின் அமெரிக்கா விஜயத்தின் போது நடைபெற்றிருந்தது.
ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருக்கு இலங்கை விமான சேவையின் பணிப்பாளர்களில் ஒருவரான டிலான் ஆரியவங்ச தனது வீட்டில் விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார்.
இதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேற்பார்வை நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன, வெளிநாட்டமைச்சின் செயலாளர் ஷேணுகா குணவர்த்தன, பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் அதிக மதுபோதையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ், தூதுவர் கிறிஸ் நோனிஸை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியுள்ளார். பின்னர் சடுதியாக அவர் தூதுவர் கிறிஸ் நோனிஸின் முகத்தில் பலமாக அறைய, அதனை எதிர்பாராத கிறிஸ் நோனிஸ் கீழே விழுந்துள்ளார்.
அதன்பின்னும் ஆத்திரம் அடங்காத சஜின் வாஸ், தூதுவர் கிறிஸ் நோனிஸை கால்களால் உதைத்துள்ளார். இதன் போது அவரது கால்விரல் ஒன்றில் சுளுக்கு ஏற்பட்டு பின்னர் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் நேரிட்டுள்ளது.
இதனையடுத்து கடும் அவமானத்துக்குள்ளான தூதுவர் கிறிஸ் நோனிஸ் விருந்து வைபவத்திலிருந்து உடனடியாக வெளியேறிச் சென்றுள்ளார். பின்னர் ஜனாதிபதியை தனியாக சந்தித்து தனது ராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளார்.
இந்த சம்பவத்தை மூடிமறைக்கவும், ஊடகங்களில் வெளிவராமல் தடுக்கவும் ஜனாதிபதி பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் விடயம் எப்படியோ ஊடகங்களுக்கு கசிந்து விட்டது.
இந்நிலையில் கலாநிதி கிறிஸ் நோனிஸ் தற்போது தனது ராஜினாமாக் கடிதத்தை வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கும் அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எதுவித முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgty.html
சஷீந்திர ராஜபக்ஷ முதலமைச்சராக பதவிப் பிரமாணம்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 04:43.36 AM GMT ]
ஊவா மாகாண சபை முதலமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவரது பதவிப் பிரமாணம் நடைபெற்றுள்ளது.
அவருடன் ஆளுங்கட்சியின் சார்பில் ஊவா மாகாண சபைக்குத் தெரிவான ஏனைய 19 உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
மேலும் மாகாண சபையின் நான்கு அமைச்சர்கள், சபை முதல்வர் ஆகிய பதவிகளுக்குத் தெரிவானவர்களும் அதற்காக தனியான பதவிப் பிரமாணத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே ஊவா மாகாண சபைக்குத் தெரிவான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
வெளிநாடு சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின், எதிர்வரும் 07ம் திகதி இந்த பதவிப் பிரமாணம் நடைபெறும் என்று அறியக்கிடைத்துள்ளது.

ஜெயலலிதா அம்மையாருக்கு ஈழத்தமிழர் எழுதும் கடிதம்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 03:49.27 AM GMT ] [ valampurii.com ]
அன்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு அன்பு வணக்கம். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தங்களுக்கு விதித்த தீர்ப்பறிந்து ஈழத்தமிழர்களாகிய நாம் அதிர்ந்து போனோம். ஏன்தான் இப்படியயன்று நொந்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதுமில்லை.
தமிழர்களை நீதியும் அநீதியும் வாட்டுவதுதான் வேதனையிலும் வேதனை. தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவியிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்ததை மறந்து விட முடியாது.
2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் இலங்கையில் வதைபட்டபோது, நீங்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். 
கெடுகாலம். நாடக நடிகர் கலைஞர் கருணாநிதி பதவியிலிருந்தார். வன்னி யுத்தம் முடிந்து எதுவெல்லாம் நடக்கக் கூடாதோ அதுவெல்லாம் நடந்து ஈழத் தமிழினம் அழுவதற்கும் உரிமையின்றி துடித்து ஓய்ந்தபோது, கலைஞர் பதவிக்கதிரையில் இருந்து இறங்கினார்.
இருந்தும் சோனியாவின் ஆட்சி நமக்குப் பாதகமாகவே அமைந்திருந்தது. இதற்கும் முடிவு வந்து மோடி பிரதமராக,
தமிழகத்தில் நீங்கள் அமோக வெற்றி பெற்று பாரதத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது பெரும்பான்மைக் கட்சி என்றிருந்த வேளை நாங்கள் புளகாங்கிதம் உற்றிருந்தோம். என்ன செய்வது! இப்படி ஓர் இடி விழுமென்று யார்தான் நினைத்தார்கள்?
எங்கள் தொடர்பில் பிரதமர் மோடிக்கு நீங்கள் அனுப்பிய கடிதங்கள், சட்டசபையில் எடுத்த தீர்மானங்கள் இதற்கெல்லாம் அப்பால் தமிழகத்தில் தற்போது நீங்கள் மேற்கொண்டு வரும் அபரிதமான அபிவிருத்திப் பணிகள் என அனைத்தையும் வியந்து பார்த்து நின்ற வேளை, தமிழர்களின் தலைவிதி இதுதான் என்பதாக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்து போயிற்று.
ஆம் தாயே! சுப்பிரமணிய சுவாமி என்ற துச்சாதனன் தமிழர்களின் துகில் உரிவதற்காக இலங்கைக்கு வந்து போன செய்தி அறிந்திருப்பீர்கள். அநீதியின் வடிவமாகிய சுப்பிரமணிய சுவாமி வென்றார் என்பதை ஒருபோதும் ஜீரணிக்க முடியவில்லை.
இவையயல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் மோடிக்கு எழுதிய கடிதங்களை கிண்டல் செய்தவர்களுக்குப் பாடம் புகட்டுவீர்கள் என்று நம்பினோம்.
எங்கள் நம்பிக்கைகள் நடுவானில் அறுந்து வீழ்வதுதான் விதியயன்றாகிவிட்ட பின்னர் அழுது புலம்புவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாகயிருந்தாலும் நீங்கள் தான் தமிழகத்தின் முதல்வர்.
ஆம்! சட்டசபைக்குச் செல்லாத முதல்வர் தமிழகத்தில் இருந்தார் என்றால் அது நீங்களா கத்தான் இருக்க முடியும் என்ற சரித்திர வரலாற்றைப் பதிவு செய்வதோடு, தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் வெதும்பும் ஈழத்தமிழர்களின் ஏக்கத்தையும் இக் கடிதம் வாயிலாகப் பதிவு செய்கிறோம்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgs6.html

Geen opmerkingen:

Een reactie posten